Sunday, 12 March 2017

Actor Kamal demands to dissolve ADMK government

Actor Kamal demands to dissolve ADMK government
Actor Kamal demands to dissolve ADMK government 
Kamal Haasan was continuously shared political views in twitter. He took part in a television interview yesterday, he spoke on various political issues in the program.  Everyone knows who created problems for the movie Viswaroopam. People's anger is burning like a volcano. A tip of the volcano's recent jallikattu protests, he said. 
That's scarier than I suggest that it would be appropriate to say that Kamal is a Dravidian. Simple leaders are necessary, he also said that he is qualified to criticise politics. The laws change and political movements of the time required to switch Kamal said, adding that people's requirements and laws have to be changed.More than 4 years of rule in the state, there is no pressure to continue. 
Because if you talk to the people it would reach many, that's where I'm talking to arrive. Why the rule of ADMK must continue for 4 years as a forced marriage. And that fresh elections should be held to choose the people they needed to head. He also demanded that probe is initiated for Former Chief Minister Jayalalithaa's mysterious death. 
ஜல்லிக்கட்டு போராட்டம் எரிமலையில் ஒரு நுனி தான், ஆட்சி தொடரக் கூடாது கமல் ஆவேசம் 
நடிகர் கமலஹாசன் தொடர்ச்சியாக அரசியல் கருத்துக்களை பகிர்ந்து வந்தார். நேற்றைக்கு தொலைகாட்சி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர், விஸ்வரூபம் படத்திற்கு யார் பிரச்னை செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்களின் கோபம் எரிமலை போன்று எரிந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது அந்த எரிமலையில் ஒரு நுனி தான் என்றார். மேலும் பல காரசாரமான அரசியல் கருத்துக்களை வெளியிட்டார். 
நான் தமிழன் என்று கூறுவதை விட திராவிடன் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும் என்று கூறிய கமல், திராவிட இயக்கங்கள் அழிந்து வருவதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியது அவரது கருத்து. எளிமையான தலைவர்கள் தேவைப்படுவதாகக் கூறிய அவர், அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் தனது முதல் தகுதி என்றும் குறிப்பிட்டார். ஊழல் என்பது வாக்காளர்களிடமிருந்தே தொடங்குறது, வாக்குகளை விலைபேசும்போது கேள்விகளை எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார். சட்டங்கள் மாறவேண்டும் சட்டங்கள் மாறவேண்டும் காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும் என்று கூறிய கமல், மக்களின் தேவைகளுக்கிணங்க சட்டங்களும் மாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். 

சமுதாயத்தில் சாதியை எடுத்துவிடுவதுதான் எனது கொள்கை, சாதியே இல்லாத சமுதாயம் அமைய வேண்டும். மக்களுக்காக பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சட்டங்களை இயற்ற வேண்டும். எனக்கு தலைவர்கள் யாரும் கிடையாது; காந்தி, பெரியார் மாதிரியான ஹீரோக்கள் தான் உள்ளனர். ஏனென்றால் காந்தி , பெரியார் இருவரும் தேர்தல் அரசியலில் இல்லை என்று கூறினார் . அரசியல் மாறுபடும் அரசியல் மாறுபடும் கொள்கை நேரத்துக்கு நேரம் மாறுபடும் . மக்களுக்கு தேவையான அரசியலே தேவை . அந்த அரசியல் காலத்துக்கு காலம் மாறுபடும். காலத்தின் தேவையாக இருந்ததால் தான் திமுக அதிமுக இயக்கங்கள் உருவெடுத்தன என்றார். 

தமிழகத்தில் மேலும் 4 ஆண்டுகள் ஆட்சி தொடரவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நான் பேசினால் மக்களை சென்றடையும் என்பதால் பேசுகிறேன். சட்டத்தைக் காரணம் காட்டி கட்டாய திருமணம் போல 4 ஆண்டுகள் ஏன் ஆட்சியைத் தொடரவேண்டும். புதிதாக தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்குத் தேவையான தலைவரை மக்களே தேர்வு செய்யவேண்டும் என்றும் கமல் தெரிவித்தார். நான் அரசியலில் என்றும் அரசியல் பேசினால் மட்டுமே அரசியலில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். நான் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்கிறேன் என்றும் கமல் தெரிவித்தார். எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டிக்கேட்க வேண்டும் என்றும் பிரதமரும், முதல்வரும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய கருவி போன்றவர்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது எரிமலையின் ஒரு நுனிதான். நான் வரி கட்டுகிறேன். ஊழலில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அதை தைரியமாக சொல்வேன். வாக்குகளுக்கு விலைபோகும் போது கேள்வி கேட்க முடியாது என்றும் கமல் தெரிவித்தார். நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வெறும் கலைஞனாக மட்டுமே தன்னால் இருக்கமுடியாது என்றும் கூறினார்.

No comments:

Post a Comment