Amy Jackson leaves Rajni's 2.0 shooting
Amy Jackson leaves Rajni's 2.0 shooting
ரஜினி பட ஷூட்டிங்கை விட்டு கிளம்பிய எமி ஜாக்சன்
மதராசபட்டினம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் . வெளிநாட்டவராக இருந்தாலும் எமி பல்வேறு தமிழ், இந்தி படங்களில் நடித்து வந்தார். ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் ஜோடியாக நடித்த 'ஐ' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
ஐ படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் எந்திரனின் அடுத்த பாகமான 2.0 திரைப்படத்தை தொடங்கினார் இயக்குனர் ஷங்கர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தமிழ், இந்தி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், ஒரு வருடத்திற்கு மேலாக யாரிடமும் கால்ஷீட் இல்லை. இதனால், மீண்டும் தன் முந்தைய பட ஹீரோயினான எமியையே 2.0க்கு புக் செய்தார் ஷங்கர்.
2.0 படத்தின் ஷூட்டிங் படுவேகமாக நடந்து வந்தது. தற்போது படத்தின் எமியின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாம். அதனால், நேற்றைக்கு தன்னுடைய கடைசி காட்சியில் நடித்து முடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறினாராம் எமி ஜாக்சன். இதன் பிறகு பிரிட்டிஷ் இயக்குனர் ஆன்டி மொராஹன் இயக்கும் ஒரு ஆங்கில படத்தில் நடிக்க உள்ளார் எமி.

Actress Amy Jackson is currently working on Super Star Rajni's 2.0 which is directed by director Shankar. The shooting of the movie took place over an year and its on final schedule. Amy's portions have been completed and she wrapped up from the shooting spot. Amy will be joining Andy Morahan's new English movie.
No comments:
Post a Comment