Thursday 9 March 2017

Director clarifies as why 'People's super star' title was used

Director clarifies as why 'People's super star' title was used
Director clarifies as why 'People's super star' title was used
ஏன் 'மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்', அடித்து பிடித்து விளக்கம் சொன்ன இயக்குனர் 
 நடிகர் ராகவா லாரன்ஸின் 'மொட்டை சிவா கேட்ட சிவா' படம் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. படத்தின் டைட்டில் கார்டில், ராகவா லாரன்ஸின்  பெயருடன் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் இணைக்கப்பட்டு இருந்தது. இது ரஜினி ரசிகர்களின் அதிருப்தியை பெற்றது.
தன்னுடைய கவனத்திற்கு தெரியாமல் இந்த விஷயம் நடந்து விட்டதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரைத் தொடர்பு கொண்ட ராகவா லாரன்ஸ் இவர்களிடம் தன்னுடைய அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து, விளக்கம் அளித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் சாய்ரமணி. "என் படத்தின் கதாநாயகனான ராகவா லாரன்ஸ் அவர்களின் நற்செயல்களையும் மனித நேயத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை என்னுடைய 'மொட்டை சிவா கேட்ட சிவா' படத்தில் பயன்படுத்தி இருந்தேன். எங்கள் அன்பின் வெளிப்பாடாக இருந்த இந்த பட்டம் அவரை ஆச்சர்யாப் படுத்தவில்லை. என்னை உடனே கூப்பிட்டு கண்டித்து மட்டுமல்லாமல் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை அழைத்து உலக சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான்  என்றும் எனக்கு இந்த பட்டம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார். படத்தில் வரும் அந்த பட்ட பெயரை நீக்குவதற்கான கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு மன்னித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவசரமாக தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் சாய்ரமணி.

Following the disappointment with the tile 'People's Super Star' from actor Raghava lawrence,  Director Sairamani of 'Motta Siva Ketta Siva' has released a statement. "The new title was added along with Raghava's name to praise his humanity and helping tendency. However the actor is not happy with it and denied the title. We will remove the title from the movie but it might take some days due to technical difficulties", Sairamani said in a statement.   

No comments:

Post a Comment