Tuesday, 21 March 2017

I want to work with Jyothika again: Director Bramma

I want to work with Jyothika again: Director Bramma

Director Bramma  is busy with ppost production of his second movie 'Magalir mattum'. Recently he said that he is interested to work with actress Jyothika for another time.
She is a director's delight. On sets, she was brimming with energy like a newcomer. I couldn't believe that I was working with a senior artiste. She did her home work when she was required to ride a bullet. I want to work with her again.
Magalir Mattum has Jyothika playing a very powerful role of a documentary filmmaker, who takes up a cause and fights for it. The film also has three other powerful women characters —Urvasi, Bhanupriya and Saranya Ponvannan — in the supporting cast.
மீண்டும் ஜோதிகாவுடன் பணியாற்ற வேண்டும்: இயக்குனர் பிரம்மா 
குற்றம் கடிதல் படம் மூலமாக தமிழ் சினிமாவின் நம்பிக்கை தரும் இயக்குனராக அறிமுகம் ஆனார் இயக்குனர் பிரம்மா. தன்னுடைய இரண்டாவது படமாக 'மகளிர் மட்டும்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார். மகளிர் மட்டும் படம் குறித்து அவர் சில சுவாரஸ்ய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

என் முதல் படமான குற்றம் கடிதல் படத்திற்கு பிறகு சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டென் அப்போதே இரண்டு கதைகளை தயார் செய்து வைத்திருந்தேன். மகளிர் மட்டும் திரைப்படத்தில் ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கதையை கூறியதும் அவர் உடனே சம்மதித்து விட்டார். படத்தில், டாகுமெண்டரி பட இயக்குனராக நடிக்கிறார் ஜோதிகா. ஷூட்டிங்கில் புதிதாக நடிக்க வந்தவர் போல் அவ்வளவு ஈடுபாடுடன் இருப்பார், படத்தில் அவர் புல்லட் ஓட்டுவது போன்ற காட்சிக்கு பல நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு வந்து அசத்தினார். இவ்வளவு பெரிய நடிகையாக இருந்தும் அவர் படத்திற்குகாட்டும் ஆர்வம் நிச்சயம் ஆச்சர்யம் அளிக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஜோதிகாவுடன்  இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் இயக்குனர் பிரம்மா. 

படத்தில் நடிகைகள் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையிலும், மற்ற காட்சிகள் உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், கேரளா உள்ளிட்ட இடங்களிலும் படமாக்கப் பட்டுள்ளன. மாயாவி படத்திற்கு பின்னர் இந்த படத்தில் தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் பேசி உள்ளார் ஜோதிகா. பெண்களை போற்று வண்ணம் இப்படம் அமையுமாம். 

No comments:

Post a Comment