Tuesday, 7 March 2017

Indian fisherman shot dead by Srilankan Navy

Indian fisherman shot dead by Srilankan Navy
Indian fisherman shot dead by Srilankan Navy
இந்திய மீனவர் படுகொலை, மீண்டும் ஆரம்பித்த இலங்கை கடற்படை
தமிழகத்தை எந்த பிரச்னை ஆட்டுவித்தாலும், காலகாலமாக நமக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது இலங்கை கடற்படையினர் நம் மீனவர்கள் மீது நடத்தும் அத்துமீறிய தாக்குதல் தான். சமீபகாலமாக மீனவர் மீதான தாக்குதல் குறைத்தது போன்று இருந்த நிலையில் தங்களின் தாக்குதலை மீண்டும் ஆரம்பித்துள்ளது இலங்கை கடற்படை.
நேற்று வழக்கம் கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் சுமார் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மீனவரான சரோன் என்பவரது கையில் காயம் ஏற்பட்டது.

இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, கடந்த ஜனவரி முதலே இளைஞர்களின் எழுச்சி அதிகமாகியுள்ள நிலையில் மீனவர் மீதான தாக்குதலுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர் இளைஞர்கள். இந்த தாக்குதலுக்கு முதல்வர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உடனடியாக மீனவர்கள் மீதான தாக்குதல்களை இலங்கை கடற்படையினர் நிறுத்திக் கொள்ள பிரதமர் மோடி வலியுறுத்த பலரும் தங்களின் கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமே கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தான். கச்சத்தீவை மீட்க வழக்கு தொடர்ந்திருந்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது அந்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத் தக்கது. அவ்வழக்கு விரைவில் நடந்து சாதகமான தீர்ப்பை நாம் பெறுகையில் மீனவர் மீதான தாக்குதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதற்காக மாநில, மத்திய அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், மீனவ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  

Srilankan navy has killed an Indian fisherman named Bridgo aged 22 near Katchatheevu. All party leader have condemned the act of Srilankan navy. TN Chief Minister Palanisamy has sent a note to PM Modi step in the issue and bring an end to the atrocities of SL navy. Former Chief Minister Jayalalithaa had filed a petition in Supreme court to reinstate the ownership of Katchatheevu. Speeding up the trail may put an end to the fisherman deaths.

No comments:

Post a Comment