Saturday 11 March 2017

Modi wave continues to sweep UP

Modi wave continues to sweep UP
Modi wave continues to sweep UP
உத்திரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்கிறது 'மோடியின்' பாஜக 
சமீபத்தில் நடந்து முதிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்திரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்கிறது மத்தியில் ஆளும் பாஜக. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 307 தொகுதியில் முன்னிலைப் பெற்று வருகின்றது பாஜக. தற்போது ஆட்சியில் உள்ள சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெறும் 71 தொகுதிகளிலேயே முன்னணியில் இருக்கிறது. இதன் மூலம் தனித்து ஆட்சி அமைக்கிறது பாஜக.
உத்திரப்பிரதேசத்தின் பக்கத்துக்கு மாநிலமான உத்ரகாண்ட்டிலும் பாஜக அலையே வீசுகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 55க்கும் மேற்பட்ட தொகுதியில் முன்னிலைப் பெற்று வருகின்றது பாஜக. இதனால் உத்ரகாண்ட்டிலும் பாஜக ஆட்சி அமைவது உறுதி ஆகியுள்ளது. 

உத்திரப்பிரதேசம், உத்ரகாண்ட்டில் ஆட்சியமைத்தாலும் பஞ்சாப் மாநிலத்தில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இங்கு காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற்று ஆட்சி அமைக்கத் தேவையான 59 இடங்களைத் தாண்டி 80 இடங்களில் முன்னிலைப் பெற்று வருகிறது. ஆச்சர்யப்படும் விதமாக ஆம் ஆத்மீ இரண்டாம் இடம் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. ஆளும் சிரோன்மணி அகாலிதளம் பின்னக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சிறிய மாநிலமான கோவாவில், தற்போது ஆளும் பாஜகவை விட காங்கிரஸ் முன்னணியில் இருந்து வருகிறது. சில தொழில்நுட்பக் கோளாறால், மொத்தமான முன்னிலை நிலவரம் வராததால் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற தெளிவில்லாமல் இருக்கிறது. மணிப்பூரில்  எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது முடிவுகள். பெரிது எதிர்பார்க்கப்பட்ட ஹிரோம் ஷர்மிளா தோல்வியைத் தழுவினார். 

வெளிவரும் 5 மாநில தேர்தல் முடிவுகள், மோடியின் மந்திரஜாலத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை என்றே தெரிகின்றது. வரவிருக்கும் இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜக விரும்பும் நபர் எளிதில் வெற்றி பெற இந்த தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. 

 
BJP is all set to sweep the Uttar Pradesh elections 2017 and PM Modi's super wave has ensured a majority government in the 403-seat state. BJP is leading in over 300 seats and the Samajwadi Party-Congress alliance has taken a bashing at the hands of the challenger. BJP is also forming the government in Uttarakand. In Punjob, Congress is leading in 80 seats and all set to form the government. Due to some technical issue, Goa's results are not fully out. As of now, Congress is leading in Goa. In Manipur, no party has crossed the majority line to form government. BJP cadres across the country are celebrating the historical victory in UP.

No comments:

Post a Comment