Raghava Lawrence: I don't want the tile 'People's super star'
Super Star Rajni's fans are upset over the new title given to actor Raghava Larence as 'People's super star' in his latest movie Motta Siva Ketta Siva. The actor immediately stepped in and clarified. "The title 'People's super star' was used by the producer without my approval. There is only one super star and I'm his big fan. I don't want anyone to address me with the title 'People's super star', Raghava Lawrence said in a statement.
மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் ராகவா லாரன்ஸ் ஆவேசம்
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'மொட்டை சிவா கெட்ட சிவா' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் விளம்பரங்களில் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' ராகவா லாரன்ஸ் என குறிப்பிடப் பட்டு இருந்தது. இது பல தரப்பிலும் ஆச்சர்யத்தை எழுப்பி இருந்தது. இளைஞர் சிலரும் அந்த பட்டம் ராகவா லாரன்சுக்கு பொருத்தமானதே என கூறினார். ஆனால், நடிகர் ரஜினியின் ரசிகர்களை மட்டும் மகிழ்ச்சி படுத்தவில்லை. ராகவா லாரன்ஸ் க்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டதை எதிர்த்து தங்களின் ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த விஷயம் உடனடியாக ராகவா லாரன்ஸ்-ன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ். "மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்குத் தேவை இல்லை. 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் என் கவனத்திற்கு கொண்டுவராமல் 'மொட்டை சிவா கெட்ட சிவா' திரைப்படன் தயாரிப்பாளர் தங்களின் விளம்பரத்தில் பயன்படுத்தி இருக்கிறார் என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். கொடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் என்றாலே அது ரஜினி தான். நான் எவ்வளவு பெரிய ரஜினி ரசிகன் என்பது என் தலைவருக்குத் தெரியும். எனவே, இனிமேல் அந்த பட்டத்தை என் பெயருக்கு முன்னால் போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

No comments:
Post a Comment