RK Nagar bi-election is on fire
ஏற்கனவே மூன்றாக பிரிந்து நிற்கும் அதிமுக, தங்களின் கட்சித் தலைவியின் தொகுதியை கைப்பற்றுவதன் மூலம் உண்மையான அதிமுக தாங்கள் தான் என கூற காத்துக் கொண்டுள்ளனர். அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள டிடிவி தினகரன் தனக்கு தேர்தலில் போட்டியிட எந்த தயக்கமும் இல்லை எனக்கூறி உள்ளார். இதன் மூலம் தினகரன் சசிகலா அணியின் சார்பாக போட்டியிடப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. ஓபிஎஸ் அணி சார்பில், அவைத் தலைவராக இருந்த மதுசூதனனை களம் நிறுத்தத் போகிறார்கள். ஜெயலலிதாவின் அன்னான் மகள் தீபா அணி சாரிப்பில் தீபாவே போட்டியிட உள்ளார்.
ஆளும் அதிமுக பிளவு பட்டு நிற்கையில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் நீடிப்பதால் யாரை ஆதரிப்பது என்ற குழப்பம் பொதுவான அதிமுகவினருக்கும், பொதுமக்களுக்கும் உள்ளது. எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது எதிர்க்கட்சியான திமுக. இடைத் தேர்தல் என்றாலே பணத்தை தண்ணீராய் செலவழிக்க வேண்டும் என்பதால் பசையுள்ள வேட்பாளரை பரிசீலித்து வருகின்றனர். தொகுதியில் நல்ல பரீச்சையமான, பசையுள்ள, முன்னர் அதிமுகவில் இருந்த சேகர் பாபு தற்போது திமுகவில் உள்ளார். இவரே திமுகவின் வேட்பாளராக நிறுத்த வாய்ப்புகள் அதிகம். தேமுதிக, சமூக நல கூட்டணி, பாஜக என இன்ன பிற கட்சிகளும் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ள இந்த தேர்தலை பயன் படுத்த நினைக்கின்றன.
ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழும், பல்வேறு கட்சிகளும் களத்தில் குதிப்பதால், கோடை வெயிலையும் தாண்டி ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் அனல் பறக்கும் என்பது தெரிகிறது. ஆட்சி கையில் உள்ளதாலும், முதல்வர் ஆக வாய்ப்புள்ளதாலும் டிடிவி தினகரனே வெற்றிபெறுவார் என்பதை எளிதில் கணிக்கலாம். ஆனாலும், ஜெயலலிதா மரணம் குறித்த தகவல்களை ஓபிஎஸ் அணி வெளியிட நேருமானால் இடைத் தேர்தல் முடிவுகள் மாறலாம்.
RK Nagar bi-election is on fire
சூடு பிடிக்கும் ஆர்.கே நகர் இடைத் தேர்தல்
தமிழக முதல்வராக பதவி வகித்து வந்த ஜெயலலிதா அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் காலமானார். 2016ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வடசென்னையில் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டு முதல்வரானார். அவருடைய மறைவுக்குப் பின்னர் காலியாக உள்ள ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மீண்டும் தமிழ்நாட்டு அரசியலை பரபரப்பாகி இருக்கிறது.
ஏற்கனவே மூன்றாக பிரிந்து நிற்கும் அதிமுக, தங்களின் கட்சித் தலைவியின் தொகுதியை கைப்பற்றுவதன் மூலம் உண்மையான அதிமுக தாங்கள் தான் என கூற காத்துக் கொண்டுள்ளனர். அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள டிடிவி தினகரன் தனக்கு தேர்தலில் போட்டியிட எந்த தயக்கமும் இல்லை எனக்கூறி உள்ளார். இதன் மூலம் தினகரன் சசிகலா அணியின் சார்பாக போட்டியிடப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. ஓபிஎஸ் அணி சார்பில், அவைத் தலைவராக இருந்த மதுசூதனனை களம் நிறுத்தத் போகிறார்கள். ஜெயலலிதாவின் அன்னான் மகள் தீபா அணி சாரிப்பில் தீபாவே போட்டியிட உள்ளார்.
ஆளும் அதிமுக பிளவு பட்டு நிற்கையில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் நீடிப்பதால் யாரை ஆதரிப்பது என்ற குழப்பம் பொதுவான அதிமுகவினருக்கும், பொதுமக்களுக்கும் உள்ளது. எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது எதிர்க்கட்சியான திமுக. இடைத் தேர்தல் என்றாலே பணத்தை தண்ணீராய் செலவழிக்க வேண்டும் என்பதால் பசையுள்ள வேட்பாளரை பரிசீலித்து வருகின்றனர். தொகுதியில் நல்ல பரீச்சையமான, பசையுள்ள, முன்னர் அதிமுகவில் இருந்த சேகர் பாபு தற்போது திமுகவில் உள்ளார். இவரே திமுகவின் வேட்பாளராக நிறுத்த வாய்ப்புகள் அதிகம். தேமுதிக, சமூக நல கூட்டணி, பாஜக என இன்ன பிற கட்சிகளும் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ள இந்த தேர்தலை பயன் படுத்த நினைக்கின்றன.
ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழும், பல்வேறு கட்சிகளும் களத்தில் குதிப்பதால், கோடை வெயிலையும் தாண்டி ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் அனல் பறக்கும் என்பது தெரிகிறது. ஆட்சி கையில் உள்ளதாலும், முதல்வர் ஆக வாய்ப்புள்ளதாலும் டிடிவி தினகரனே வெற்றிபெறுவார் என்பதை எளிதில் கணிக்கலாம். ஆனாலும், ஜெயலலிதா மரணம் குறித்த தகவல்களை ஓபிஎஸ் அணி வெளியிட நேருமானால் இடைத் தேர்தல் முடிவுகள் மாறலாம்.
TN Election commission has announced bi-election in RK Nagar constituency. Late Chief Minister Jayalalithaa was chosen to TN assembly from RK Nagar in 2016 general elections. ADMK's all the three groups are getting ready to nominate their candidates. ADMK's deputy general secretary TTV Dinakaran, Jayalalithaa's niece Deepa and Madhusoodhanan of OPS camp are going to face the battle. Opposition parties like DMK, DMDK, BJP and other parties are also keen to contest and prove their strength in RK Nagar bi-election.
No comments:
Post a Comment