Tuesday, 7 March 2017

Vijay and Trisha to pair up again for Gilli 2?

Vijay and Trisha to pair up again for Gilli 2?
Vijay and Trisha to pair up again for Gilli 2?
கில்லி இரண்டாம் பாகத்தில் இணைவார்களா விஜய் த்ரிஷா 
தமிழ் சினிமாவில் இது பார்ட் 2 காலம். எந்திரன், சிங்கம், சாமி, வேலை இல்லா பட்டதாரி என பல  வெற்றி படங்கள் இரண்டாம் பாகமாக மீண்டும் வெளிவரவுள்ளன. ஆகையால், மேலும் பல வெற்றிப்படங்களையும் இரண்டாம் பாகமாக எடுக்கலாமா என இயக்குனர்கள் ஆலோசனையில் உள்ளனர். 
மற்ற இயக்குனர்களை போலவே இயக்குனர் தரணியும் தன்னுடைய படம் ஒன்றின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். அதனால் தன்னுடைய படங்களான தம் மற்றும் கில்லியின் இரண்டாம் பாகத்துக்கான ஆயத்தப்பணியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நடிகர் விக்ரம் ஏற்கெனவே சாமி-2ல் நடிப்பதால், நடிகர் விஜய்யிடம் கில்லி 2 குறித்து ஆலோசிக்க நேரம் கேட்டுள்ளார் இயக்குனர் தரணி. 

ஒருவேளை, கில்லி இரண்டாம் பக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க ஒப்புக் கொண்டால், அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி நடித்தால், குருவி படத்துக்குப் பின் வெற்றி ஜோடியான விஜய்-த்ரிஷா கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் பிறகு இணைவர். இதன் மூலம் மீண்டும் நடிகை த்ரிஷா முன்னணி கதாநாயகியாக வலம் வரவாய்ப்புள்ளது. 
 
It's sequel season in Tamil film industry that many directors are planning for a sequel of their earlier blockbusters. Director Dharani is one among them and working on sequel scripts of Dhum and Gilli. He is planning to retain the same cast of Gilli. If this idea is materialized, actor Vijay and Trisha will be pairing up after 7 years.

No comments:

Post a Comment