Tuesday, 7 March 2017

Singapore actor in Jayam Ravi's Tik Tik Tik

Singapore actor in Jayam Ravi's Tik Tik Tik
Singapore actor in Jayam Ravi's Tik Tik Tik
ஜெயம் ரவியுடன் இணையும் வெளிநாட்டு நடிகர் 
தமிழ் சினிமாவின் முதல் விண்வெளி திரைப்படமாக தயாராகிறது சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் 'டிக் டிக் டிக்'. ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த அக்டோபர் மாதம் முதல் நடை பெற்று  வருகிறது. சமீபத்தில், சிங்கப்பூர் நடிகர் ஆரோன் ஆசிஸ்-ம் இந்த படத்தில் இணைந்துள்ளார். இது ஆரோன் நடிக்கும் முதல் இந்திய, தமிழ் படமாகும். ஏற்கெனவே ஜெயம் ரவியுடன், பேராண்மை படத்தில் ரோலண்ட் கிக்கிங்கர் என்ற அமெரிக்கா நடிகரும், பூலோகம் படத்தில் ஆஸ்திரேலிய நடிகர் நாதன் ஜோன்ஸ்-ம் இனைந்து பணியாற்றியுள்ளனர். 
ஒரு நாள் கூத்து படத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ் இந்த படத்தின் காதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கதைப்படி, கதாநாயகிக்கும் சண்டைக் காட்சிகள் உள்ளதாம், ஏற்கெனவே ஜூஜூட்சு மற்றும் குத்துச் சண்டையில் பெற்றவரான நிவேதா அதனால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இந்த படத்துக்கான இசையை இமான் அமைக்கிறார். தமிழ் சினிமாவின் முதல் ஸோம்பி திரைப்படமான மிருதனிலும் ஜெயம் ரவி - இமான் - சக்தி சௌந்தர்ராஜன் குழு இணைந்து பணியாற்றியது குறிப்பிடத் தக்கது. 

மிகுந்த பொருட்செலவில் தயாராகி வரும் 'டிக் டிக் டிக்' திரைப்படத்தை நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன் தயாரிக்கிறது. தன்னுடைய கேரியரிலேயே 'டிக் டிக் டிக்' படம் தான் மிகப்பெரும் படமாக இருக்கும் என நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார். மிருதன் படம் போன்றே 'டிக் டிக் டிக்'க்கும் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துவோம். 

Singapore actor Aaron Aziz has roped in for a role in for Jayam Ravi's next movie Tik Tik Tik, which is the first Tamil space thriller film. Director Sakthi Soundarrajan who worked with Ravi in Miruthan is directing the movie while Nivetha Pethuraj is chosen as female lead. In an interview Jayam Ravi described Tik Tik Tik as the biggest film in his career which is produced by Nemichand Jhabak.

No comments:

Post a Comment