Tuesday 7 March 2017

Super star's surprise call to Actor Arun Vijay

Super star's surprise call to Actor Arun Vijay

Super Star Rajni has enjoyed the special screening of latest hit movie 'Kutram 23'. Super star also called the hero actor Arun Vijay and congratulated him for the success of the movie. Actor Arun Vijay was struggling for hit and Kutram 23 came as relief and getting him all praise. 
அருண் விஜய்யை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான குற்றம் 23 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து வரும் நல்ல விமர்சனங்களால் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றைக்கு படத்தின் ஹீரோ அருண் விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

குற்றம் 23 படத்தைப் பற்றி கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, அந்த படத்தை பார்க்க விரும்பியுள்ளார். அவருக்காக நேற்றைக்கு ஒரு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது நன்றிகர் அருண் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சூப்பர் ஸ்டார் படத்தின் வெற்றிக்காக தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படம் நன்றாக எடுத்துள்ளதாக இயக்குனருக்கும் தன் பாராட்டைத் தெரிவித்துள்ளார் நம்ம சூப்பர் ஸ்டார். ஒரு பெரும் வெற்றிக்காக காத்திருந்த நடிகர் அருண் விஜய்க்கு குற்றம் 23 திரைப்படம் ஹிட் ஆனதோடு பல பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment