Sunday 12 February 2017

Sasikala's camp is decreasing, OPS continues to hold Government

Sasikala's camp is decreasing, OPS continues to hold Government

Sasikala's camp is decreasing, OPS continues to hold Government 
காலியாகும் சசிகலா ஆதரவு கூடாரம், ஆட்சியை தக்க வைக்கிறார் ஓபிஎஸ் 
நேற்று வரை சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த மாஃபா பாண்டியராஜன், பொன்னையன் உள்ளிட்ட அதிமுகவின் பெருந்தலைகள் இன்று திடீரெனெ கூடாரம் மாறி ஓபிஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தன் தொகுதி மக்களின் கருத்தின் அடிப்படையிலேயே ஓபிஎஸ்ஸை ஆதரிப்பதாக பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 
அதிமுகவின் எம்பிக்கள் இரண்டு பேரும் இன்று ஓபிஎஸ்ஸை சந்தித்து தங்களின் ஆதரவைஓபிஸ்க்கு நல்கி உள்ளனர். மேலும் தம்பிதுரையை தவிர்த்து மீதி உள்ள 36 எம்பிக்களும் ஓபிஎஸ் ஆதரவு மனநிலையிலேயே உள்ளனர், விரைவில் அவர்களும் இங்கே வந்து ஓபிஎஸ் பின்னால் அணி வகுப்பார்கள் என்றும் சசிகலாவுக்கு கிலியை கிளப்பி உள்ளனர் . இந்த பல்டிகளை எல்லாம் பார்த்த சசிகலா, எம்எல்ஏக்களை தங்க வைத்துள்ள கூவத்தூர் விரைந்து ஆலோசித்து வருகிறார். இனியும், ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை எனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம். 
பிரச்னை கையை மீறிப் போகிறது, விட்டால் ஆட்சியே கலைத்து முதலுக்கே மோசமாகிவிடும்  என சில அதிமுக நிர்வாகிகள் நினைத்து சசிகலா, ஓபிஎஸ் தரப்புக்கிடையே சமரசம் செய்ய மேற்கொண்ட முயற்சியையும் சசிகலா 'வேண்டாம், ஆவதை ஒரு கை பார்த்து விடுவோம்' என முட்டுக்கட்டைப் போட்டுவிட்டிருக்கிறார். தம்பிதுரை மூலமாக பாஜக தரப்பிடம் பேச முயற்சி செய்து வருகிறாராம். எனினும், பாஜக தரப்பில் எந்தவித ரியாக்ஷனும் இல்லையாம். தாங்கள் முன்னெடுக்கும் எந்த முயற்சியும் பலனளிக்காததால் விரக்தியில் அடுத்த நகர்வுக்கான ஆயத்தப் பணிகளில் உள்ளனர் சசிகலா மற்றும் ஆதரவாளர்கள். 

In an interesting twist ADMK leader Ponnaiyan and Mafoi Pandiarajan has joined OPS camp today. Other 2 MPs have also met OPS in his house and extended their support. They have also told the media that except Thambidurai all the 36 MPs will be joining OPS. After this move, feared Sasikala rushed to Koovathu where MLAs are staying and held a discussion as no hope on forming the government immediately. Sasikala is likely to past in former Chief Minister Jayalalithaa's memorial to protest against the Governor.

No comments:

Post a Comment