Friday, 17 February 2017

Uproar in Tamil Nadu assembly

Uproar in Tamil Nadu assembly
Uproar in Tamil Nadu assembly 
களேபரமான தமிழக சட்டசபை  
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்று இன்று தன்னுடைய பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க சட்டசபை கூட்டப்பட்டது. 27 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள 230 எம்எல்ஏக்கள் சட்டசபை வந்துள்ளனர். 
சபை கூடியதும், பன்னீர் செல்வத்தின் ஆதரவு எம்எல்ஏ செம்மலை ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால், அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டசபை கதவுகள் மூடப்பட்டு, எம்எல்ஏக்கள் ஆறு பிரிவாக அமரவைக்கப்பட்டனர். வாக்கெடுப்பிற்க்கு முன் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், அதிமுக எம்எல்ஏக்களை அடைத்து வைத்து கட்டாய படுத்தி வாக்களிக்க வைப்பது கண்டிக்கத் தக்கது என பேசினார். பின்னர் ஒரு பிரிவுக்கான வாக்குகள் மட்டும் பதிவான நிலையில் கலவரம் வெடித்துள்ளது.

ஒரே நேரத்தில் பல எம்எல்ஏக்களும் எழுந்து பேச ஆரம்பித்ததால் கூச்சலும் குழப்பமும் நிலவியதும், சசிகலா ஆதரவு கோஷங்கள் போட ஆரம்பித்தனர் அதிமுகவினர். இரண்டு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் காகிதங்கள் பறந்தன, மைக்குகள் உடைத்து எறியப்பட்டன. பத்திரிக்கையாளர்கள் பகுதியில் இருந்த ஒலிப்பெருக்கி பழுதானது. சட்டசபை போர்க்களம் போல் காணப்பட்டது. சபையை மதியம் 1 மணிவரை ஒத்தி வைத்து வெளியேறினார் சபாநாயகர் தனபால். 

Chief Minister Edapadi Palanichami is going under the ground test in Tamil Nadu state assembly today. Around 230 MLAs have present to vote in the ground test. MLAs are split into 6 groups for voting. Speaker Dhanapal has adjourned the assemble till 1 PM today as violence broke in assembly, mics are also broken .

No comments:

Post a Comment