Tuesday, 4 April 2017

PM Modi's influence in Endhiran 2.0

PM Modi's influence in Endhiran 2.0
PM Modi's influence in Endhiran 2.0
Prime Modi has been endorsing various schemes including Make in India which is an initiative launched by the Government of India to encourage multi-national, as well as national companies to manufacture their products in India. It seems makers of Endhiran 2.0 has taken this scheme serious and contributed to it.
Director Shankar is know for is larger than life movies which has massive sets and impressive foreign visuals. However, he hasn't shot any single scene outside India for his upcoming movie Endhiran 2.0 with Super star Rajni. The entire shooting of the movie was complete other than a song sequence. The sources from the movie crew siad that Shankar and team might travel abroad to shoot the song. But recently, it is confirmed that the song sequence will be filmed in Hyderabad.
Super star Rajni is going to join the song shooting in Ramoji film city in Hyderabad next week where a massive set has been erected by art director T.Muthuraj. Ace Director Manirathnam has always shot his movies only inside India. It is a welcome move by Endhiran 2.0 to invest the entire budget Rs.350 crores in India.
பிரதமர் மோடியால் எந்திரன் 2.0 படத்தில் நிகழ்ந்த மாற்றம்
இந்திய பிரதமர் பல்வேறு திட்டங்களை அறிவித்து, மக்களின் பங்களிப்பையும் கோரி வருகிறார். அந்த வகையில் மோடியால் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வரும் திட்டம் தான் 'மேக் இன் இந்தியா' திட்டம். இதனை எந்திரன் 2.0 படக்குழுவினரும் படு சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளனர் என்பது தான் சுராஸ்யம்.
இயக்குனர் ஷங்கர், தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் கொண்டவர். தன்னுடைய படத்தின் ஒவ்வொரு காட்சியும் புதுமையாக இருக்க மெனக்கெடுவார். பாடல் காட்சிகளில் உலக அதிசயங்களை சுற்றிக்காட்டியவர், பெரும்பாலும் அனைத்து வெளிநாட்டில் உள்ள அருமையான இடங்களை தன்னுடைய படத்தில் மக்களுக்காக காட்சி படுத்தியவர். ஆனால், தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் இவர் எடுத்து வரும் எந்திரன் 2.0வில் தன்னுடைய பாணியை மாற்றிக் கொண்டுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
எந்திரன் 2.0 படத்தின் ஒட்டு மொத்த காட்சிகளும் இந்தியாவிலேயே படமாக்கி இருக்கிறார் ஷங்கர். இன்னும் ஒரே ஒரு பாடலை மட்டும் ஷூட் செய்யாமல் இருந்தவர், அந்த பாடலுக்காக ஏதேனும் வெளிநாடு செல்வார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் அந்த பாடல் காட்சியை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைத்து எடுக்க இருக்கிறார்களாம். இதன் மூலம், எந்திரன் 2.0 படத்தின் மொத்த பட்ஜெட்டான 350 கோடி ரூபாயை முற்றிலுமாக இந்தியாவிலேயே முதலீடு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள். இயக்குனர் மணிரத்னம் எப்போதுமே இந்தியாவில் மட்டுமே படப்பிடிப்பு நடத்துவார். இதே போன்று அனைத்து இயக்குனர்களும் இந்தியாவிலேயே படப்பிடிப்பை நடத்தும் போது தயாரிப்பு செலவை சிறிதேனும் குறைக்க இயலும்.



No comments:

Post a Comment