Wednesday 5 April 2017

Producer confirms the sequel of Baashaa

Producer confirms the sequel of Baashaa
Producer confirms the sequel of Baashaa 
Super Star Rajni's blockbuster hit movie 'Baashaa' is making  made a comeback in digital format in March across Tamil Nadu and became a hit in Box office across the world. Baashaa is still grabs the top position in TRP rating whenever telecasted in TV. 
To convey his gratitude for the digitalised Baashaa release, Rajni has called on the produce RM Veerappan. During this meet they have discussed on various things including the sequel of Baashaa. 

RM Veerappan's son M Thangaraj who is managing the Sathya movies was the master mind behind the digital version of Baashaa. He has confirmed that they are in initial stages of Baashaa franchise movies. So fans may expect the announcement Baashaa-2 very soon. 
பாட்ஷா-2 வருகிறது, உறுதி செய்த தயாரிப்பாளர்.
எந்த ஒரு ரஜினி ரசிகருக்கும் விருப்பமான ரஜினி படங்களில் முக்கியமான படம் பாட்ஷா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவின் சிம்மாசனத்தில் இன்றைக்கு வரைக்கும் அமர்ந்திருக்கும் படம் 'பாட்ஷா'. நொடிக்கு நொடி மாஸ், ஆக்ஷன் என ரஜினியின் விஸ்வரூப இமேஜுக்கு பாட்ஷாவும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என டப் செய்யப்பட்டு ஹிட் அடித்தது.

இன்றைக்கும் பாட்ஷாவை டிவியில் போட்டால் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில்இருக்கிறது. எந்த ஒரு ரஜினி ரசிகரும் பாட்ஷா படத்தை குறைந்தது 10 முறைக்கு மேலாவது பார்த்திருப்பார். அப்படிப்பட்ட மாஸ் திரைப்படமான பாட்ஷா, இந்த மார்ச் மாதத்தில் மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. 22 வருஷமாக ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது அத்தனை தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பமாக இருந்த பாட்ஷா படத்தின் அடுத்த பாகத்தை பற்றிய பேச்சு எப்போதும் நிலவி வந்த நிலையில், உறுதியான தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.   

பாட்ஷா டிஜிட்டலில் வெளியாகி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்க தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் பல்வேறு விஷயங்களை பற்றி கலந்துரையாடி உள்ளனர். அவர்களது உரையாடலில் பாட்ஷா-2 பற்றிய பேச்சும் இருந்துள்ளதது. இதனை, ஆர்.எம்.வீரப்பனின் மகனும், டிஜிட்டலில் பாட்ஷாவை தயார் செய்தவருமான எம்.தங்கராஜ் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு நிச்சயம் இது கொண்டாட்டமான செய்தியாகவே இருக்கும். 

No comments:

Post a Comment