Nibunan Movie Review | Nibunan Tamil Review | Arjun | Prasanna | Vaibhav | Varalaxmi Sarathkumar
Nibunan Movie Review | Nibunan Tamil Movie Review | Arjun |
Prasanna | Vaibhav | Varalaxmi Sarathkumar
Nibunan is a neo noir crime thriller film co-written, co-produced
and directed by Arun Vaidyanathan. The film features an ensemble cast of Arjun
(in his 150th film), Prasanna, Vaibhav, Varalaxmi Sarathkumar and Sruthi
Hariharan in the lead roles whereas Suhasini, Suman, Poster Nandhakumar, Uma
Riyaz Khan, Sudha Rani plays a supporting roles. The film marks the 150th film
of Arjun. Featuring music composed by S. Navin and cinematography by Arvind
Krishna, the film began production in late 2015. The film will be shot
simultaneously in Tamil and Kannada. The film will be released in Telugu as
Kurukshetram.
அர்ஜுன்
படத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்து அவரது
ரசிகர்கள்(?) செல்வார்களோ அதெல்லாம் இந்த படத்திலும் இருக்கிறது.
யூனிபார்ம் போடாத போலீஸ், அன்பான
மனைவி, பாசமுள்ள தம்பி, படிக்கும் பப்ளியான
குழந்தை என தன் ஏரியாவை
மாற்றிக்கொள்ளவேயில்லை அர்ஜுன்.
நகரத்தில்
கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஒருவர்,
டாக்டர் ஒருவர், வக்கீல் ஒருவர்,
நாய் ஒன்று, ஒரு போலீஸ்
இன்ஸ்பெக்டர் என தொடர் கொலை
நடைபெறுகிறது. இந்த கொலையைச் செய்வது
ஒரே ஆள் தான் என்று
நிபுணனான அர்ஜுனும், அவரது குழுவினரான பிரசன்னாவும்,
வரலட்சுமியும் வழக்கம் போல் கிளைமாக்சில்
கண்டுபிடிக்கிறார்கள். அதற்கு பின் அவரை
ஆக்ஷன் கிங் அர்ஜுன் பார்ட்
=2 எடுப்பதற்குரிய லீடுடன் எப்படி ஜெயிக்கிறார்
என்பதே நிபுணன் படத்தின் திரைக்கதை.
படத்தைப்
பார்க்கும் போது புத்திசாலித்தனமான ரசிகனுக்கு
ஏன் ஏன் என ஆயிரம்
கேள்விகள் வந்துகொண்டேயிருக்கின்றன. பதில் சொல்லவேண்டிய இயக்குநர்
இது ஒரு எண்டர்டெயினர் என்றும்
நோ லாஜிக் ஒன்லி மாஜிக்
என்று திரைக்கதை அமைத்திருக்கிறார். அதனால் திரைக்கதையில் இயக்குநர்
ஜொலிக்கவில்லை என்றே கூறலாம்.
போலீஸ்
கதை, அர்ஜுன் ஹீரோ, அவருக்கு
பர்கின்சன்ஸ் நோயின் பாதிப்பு தொடக்க
நிலையில் இருக்கிறது என்று இயக்குநர் சொல்லும்
போதுள ரசிகர்கள் பரபர கிளைமாக்சுக்கு எதிர்பார்த்து
ஆவலுடன் காத்திருக்க, ஒரே அடியில் பர்கின்சன்ஸ்
போயே போச்சு என்று சொல்வது...
திரைக்கதைக்கு எந்தவகையிலும் உதவவில்லை.
வரலட்சுமியும்
பிரசன்னாவும் டயலாக் பேசும் ஜுனியர்
ஆர்ட்டிஸ்ட்டுகளாக உபயோகித்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.
வில்லனாக
நடித்திருப்பவர் வளர்ந்து வரும் இளம் முன்னணி
நடிகர். இது யாரும் எதிர்பார்க்காத
சஸ்பென்ஸ். ஆனால் சிரிப்பு தான்
வருகிறது.
பின்னணியிசை
லோன்லி போன்ற பல ஆல்பங்களில்
ஒலித்த இசையை சுட்டு ஒலிக்க
வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் நவீன். அதனால் மனதார
பாராட்டமுடியவில்லை.
இயக்குநர்
அருண் வைத்யநாதனின் முதல் படமான ‘அச்சமில்லை அச்சமில்லை ’படத்தில்
குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தல் இடம்பெற்றிருந்தது.
இந்த படத்தில் பதின் வயது பெண்ணின்
பாலியல் துன்புறுத்தல் இடம்பெற்றிருக்கிறது. அதில் பெற்றோர்கள் போராடுவார்கள்.
இதில் பெற்றோர்கள் ஆணவக்கொலையைச் செய்துவிட்டு, தற்கொலையும் செய்துகொள்கிறார்கள்.
சுமனும், சுஹாசினியும் நகரத்தில் பெரிய ஆர்க்கிடெக்ட். ஆனால்
பதிவு செய்யப்படும் போலீஸ் விசாரணையின் போது
லஞ்சம் கொடுக்க தயாராக இருப்பதாக
பேசுவது சுத்த அபத்தம்.
படத்தில்
இருக்கும் ஒரே நல்ல விசயம்,
தங்களுடைய மகள் பதின் வயதில்
வேலைக்காரருடன் அந்தரங்கமாக இருப்பதைப் பார்த்துவிட்டு சுஹாசினி, பிசினஸ் பிசினஸ்னு நெறைய
நேரம் வெளில ஸ்பெண்ட் பண்ணினோம்.
கொஞ்சம் வீட்லேயும் ஸ்பெண்ட் பண்ணியிருந்தா.. இதெல்லாம் நடந்துருக்காதுல்ல.. என வருந்தும் தொனியில்
பேசும் டயலாக். இன்றைய சூழலில்
பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கான எச்சரிக்கை வாசகம்.
இயக்குநர்
வைத்திருக்கும் ட்விஸ்ட், க்ளு எல்லாம் க்ரைம்
நாவல்களை படிக்கும் பாமர வாசகனுக்கு அத்துப்படி.
அதிலும் ராஜேஷ்குமார் வாசகர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் இந்த க்ளூவிற்கு
டாண் டாண் என்று பதிலளிப்பார்கள்.
அருண் சார் உங்க ஸ்டைல்
படம் என்று நினைத்து தான்
தியேட்டருக்குள் வந்தோம். வந்தால் இது பக்கா
அர்ஜுன் படமாக இருக்கிறது.
மொத்தத்தில்
நிபுணன்= நிராசை.
Watch More Exclusive Cinema News, Rasi
Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities
Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe
us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
No comments:
Post a Comment