Tuesday, 25 July 2017

Vikram Vedham | Meesaya Murukku Box Office Collection | எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?


Vikram Vedham | Meesaya Murukku Box Office Collection | எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?
Vikram Vedham | Meesaya Murukku Box Office Collection | எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்?
Vikram Vedham | Meesaya Murukku Box Office Collection | எந்த படம் ஹிட்டு எந்தப்படம் ஃப்ளாப்? | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
இந்த வாரம் வெளியான   சில படங்களில் முக்கியமான படங்கள் விக்ரம் வேதா, மீசைய முறுக்கு. இந்த இரண்டு படங்களில் எல்லோரது கவனத்தையும் அதிகம் ஈர்த்த படம் 'விக்ரம் வேதா'. மாதவன், விஜய்சேதுபதி இணைந்து நடித்த இந்தப்படத்திற்கான முன் பதிவு டிக்கெட்டுகள் அதிவேகமாக விற்பனையானது. நல்ல ஓபனிங்காகவே இருந்தது. டிக்கெட்விலை ஏற்றப்பட்ட நிலையிலும் ரசிகர்கள் பெருமளவில் தியேட்டர்களுக்கு வந்தனர் என்பது குறிப்பிடதக்கது. நமது சென்னை விநியோகஸ்தர் கொடுத்த தோராயமான இந்த இரண்டுபடங்களின் வசூலை பார்ப்போம்.
இசையமைப்பாளர்கள்  விஜய் ஆண்டனி, ஜிவி.பிரகாஷ் வரிசையில்  ஹிப் ஹாப் தமிழாஆதி இசை அமைத்து, கதாநாயகனாக நடித்து, இயக்குனராகவும் அறிமுகாமாகியுள்ள படம்  ‘மீசைய முறுக்கு.திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்தால் நினைத்ததை அடைய முடியும் என்ற ஒரு கருத்தைக் கொண்டு உருவாகியுள்ள படம்.
படத்தின் முதல் பாதி  கல்லூரிக் கலட்டாக்கள், மோதல், காதல், என ஜாலியாக போகிறது. இரண்டாம் பாதியில் காதல் பிரச்சனை, திறமைக்கு கிடைகாத அங்கிகாரம்,  சென்டிமென்ட் என கதையை கொண்டு சென்று க்ளைமாக்ஸில் இளைய தலைமுறைக்கு ஒரு மோட்டிவேஷன் கொடுக்கும் படமாக தந்திருக்கிறார். இடையிடையே  வரும் பாடல்கள் போரடிக்க வைக்கிறது. பார்த்து பழக்கப்பட்ட காட்சிகளும் சோர்வை தருகிறது.
ஆதிக்கு எமோஷனல் காட்சிகள் வரமறுக்கிறது. நடிப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். ஆத்மிகா ரசிக்கவைக்கிறார். மான்டேஜ் சாங்ஸ்,பின்னணி இசை, க்ளைமாக்ஸ் படத்திற்கு பின்னடைவு. இளைஞர்களுக்கான படமென்றாலும் இது எல்லா இளைஞர்களையும் கவராது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போது ஆதிக்கென்று உருவான ரசிகர்களால் இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய பின்னடைவை சந்திக்கவில்லை. இந்தப்படத்தின் தோரயமான சென்னை வசூல் 49,34,500 ரூபாய். படத்தின் பட்ஜெட் 1.5 கோடியிலிருந்து 2 கோடி வரை என வைத்துக்கொண்டாலும் இந்தப்படத்தின் இதுவரையிலான வசூலை கணக்கிடும் போது அனைத்து தரப்பினருக்கும் இது லாபம் கொடுக்கும் படமாகவே இருக்கும்.
விக்ரம் வேதா
ஓரம்போ, வா, போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த புஷ்கர்,காயத்ரி இயக்குனர் தம்பதியினர் கொடுத்திருக்கும் படம் 'விக்ரம் வேதா'. விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்ப்பார்ப்பை இயக்குனர்கள் பூர்த்தி செய்திருக்கிறார்கள்.
வழக்கமான ஒரு கதைக்களம் என்றாலும் அதை திரைக்கதை மூலம் சுவாரஷ்யமாக கொடுக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றனர்ஒரு சில லாஜிக் விஷயங்களை தவிர்த்துப் பார்த்தால் இந்தப்படத்தில் எந்தக்குறையும் இல்லை என்றே சொல்ல வேண்டும். டிக்கெட் விலை ஏற்றப்பட்ட பின்னரும் இந்தப் படத்திற்கான வரவேற்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது. இளைஞர்களை அதிகம் கவர்ந்த படமாகவும் விளங்குகிறது.
இந்தப்படத்தின் தோராயமான சென்னை வசூல் 1,79,35,500 கோடியாகும். இதன் மூலம் இந்த வாரத்தின் சூப்பர் ஹிட் படமாக விக்ரம் வேதா வசூல் சாதனை படைக்கும்.
 விக்ரம் வேதா, மீசைய முறுக்கு  இந்த இரண்டு படங்களையும் காண இளைஞர்படை கூட்டம் கூட்டமாக வருவதால், தியேட்டர்களுக்கு புதிய புத்துணர்வை கொடுத்துள்ளது .
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
                                                                                                                                                                        
Follow us:

No comments:

Post a Comment