தலித் மக்களை இழிவுபடுத்திய காயத்ரி ரகுராம்? | Gayathri Raghuram controversy Talk on Dalith
தலித் மக்களை இழிவுபடுத்திய காயத்ரி ரகுராம்? | Gayathri Raghuram controversy Talk on
Dalith
தலித் மக்களை இழிவுபடுத்திய காயத்ரி ரகுராம்? | Gayathri Raghuram controversy Talk on
Dalith | Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
பணமதிப்பிழப்பு,
நிலையற்ற அரசாங்கம், ஜிஎஸ்டி என பல பிரச்சனைகள் பலவற்றிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களை திசை திருப்பி வருகிறது என அரசியல் விமர்சகர்கள்,
பத்திரிகைகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரியும் கமல்ஹாசன் உள்ளிட்ட சம்பந்தபட்டவர்களை கைது செய்யக்கோரியும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இத குறித்து பத்திரிகையாளர்களை
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியை தடைசெய்ய கோரிக்கை வைத்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மேலும் ஒரு புதிய புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. நடிகை காயத்ரி ரகுராம் மீது புகார் மனுவில் பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
இந்திய கலாசாரத்துக்கு எதிராக இருப்பதாகவும், அந்த நிகழ்ச்சியை தடைசெய்ய வேண்டும் என்றும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் 14 நடிகர், நடிகைகள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில், நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி கொடுத்தார். தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால்,
சட்டமும், நீதியும் தன்னை காப்பாற்றும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்று தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தடைசெய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், நடிகை காயத்ரி ரகுராம் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருக்கிறார் என்றும்,
அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan,
Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews,
Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
No comments:
Post a Comment