Thursday, 13 July 2017

Pandigai Movie Review | Kreshna | Anandhi | Feroz | Vijayalakshmi | Pandigai Tamil Movie Review


Pandigai Movie Review | Kreshna | Anandhi | Feroz | Vijayalakshmi | Pandigai Tamil Movie Review
Pandigai Movie Review | Kreshna | Anandhi | Feroz | Vijayalakshmi Ahathian | Pandigai Tamil Movie Review
Pandigai is an action thriller film directed by debutant Feroz and produced by his wife Vijayalakshmi, starring Kreshna and Anandhi in the leading roles.
'Pandigai is an interesting gangster film. The hero (Kreshna) is an orphan, who grew up in a boarding school where everyone is ill-treated. So, he grows up in an assumption that one can get things done only by hitting and threatening others. The film revolves around the underground illegal street fighting and A street fight festival organized by gangsters. Atlast, How he escapes from this situation forms the crux of the story. The makers say that the script promises joy and energy that would entertain audience. 'Pandigai' is about a man who is ready to face and fierce anything.  Saravanan Nithin Sathya, Karunas and 'Black' Pandi play important roles.
காதல் கோட்டைபுகழ் டைரக்டர் அகத்தியனின் மகள் விஜயலக்ஷ்மி அகத்தியன் தன்னுடையடீ டைம் டாக்கீஸ் புரடக்ஷன்சார்பில் தயாரித்துள்ள படம்பண்டிகை’. இப்படத்தை அவரது கணவர் ஃபெரோஸ் இயக்கியுள்ளார்முதலில் விக்ரம் பிரபு நடிப்பதாக இருந்த இப்படத்தில் க்ரிஷ்ணா நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாககயல்ஆனந்தி, நடித்திருக்கும்  இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்குமா? வாங்க பார்க்கலாம்.
பண்டிகைன்னா தீபாவளி, பொங்கல் மாதிரியான சந்தோஷமான பண்டிகையில்லை இது ரொம்பவே கொடுமையான பண்டிகை. இதற்கு அர்த்தம் என்னான்னா? இரண்டு பேர் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் ஒரு வகை குத்து சண்டை போட்டி. சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் இதற்கு எந்த விதமான ரூல்ஸும் கிடையாது. முழுக்க முழுக்க க்ரிக்கெட், மற்ற சூதாட்ட நிழல் உலக தாதாக்களால் நடத்தப்படுகிறது. கிரிக்கெட் பெட்டிங் இல்லாத நேரத்தில் பண்டிகை தான்பெட்டிங் மேட்ச்
க்ரிஷ்ணா வெளிநாடு செல்ல பணமில்லாமல் இக்கட்டான ஒரு சூழ்நிலையில், பண்டிகையில் பல லட்சம் இழந்த சரவணனை சந்திக்கிறார். அந்த சந்திப்பு இருவரின் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதை தன்னுடைய திரைக்கதை மூலமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஃபெரோஸ்.
சூதாட்டத்தை மைய்யப்படுத்தி சில படங்கள் வந்திருந்த போதும் இந்தப்படம் சற்று வித்தியாசமாகவே இருக்கிறது. சூதாட்டம் எந்த மாதிரி நடக்கும் எப்படி அப்பாவிகள் ஏமாற்றப் படுவார்கள் என்பதை தெளிவாகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஆனால் அந்த பண்டிகையின் களம் தான் அந்நியப்பட்டு நிற்கிறது. இப்படியெல்லாம் நடக்குமா என சந்தேகம் வருவதால் படத்தின் நம்பகதன்மை குறைந்து விடுகிறது.
க்ரிஷ்ணா கயல் ஆனந்தி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளில் எந்த விதமான ஈர்ப்பும் ஏற்படவில்லை. அவருக்கு மிக குறைவான காட்சிகள் என்பதுடன் கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. சூதாட்டத்தில் மனைவி மற்றும் வீட்டை இழந்து நிற்கும் சரவணனின் மேல் பரிதாபம் ஏற்படவில்லை. ஆனால் கிருஷ்ணா மோதிக்கொள்ளும் சண்டைகாட்சிகள் நிகம் கடிக்கும் அளவிற்கு இருக்கிறது.
 மதுசூதனின் வீட்டிற்குள் கிருஷ்ணா, சரவணன் கோஷ்டி பணத்தை கொள்ளையடிக்கும் காட்சி திக்.. திக். இரட்டையர்களாக வரும் சபரீஷ் விஜயன் காட்சிகள் சற்றே ரசிக்க வைத்தாலும் தேவையில்லாத ஒன்று அவரோட காட்சிகளை எடுத்துவிட்டால் படத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
நிதின் சத்யாமுந்திரி சேட்டுகதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் கைதட்டல்கள் பெறுகிறார். அதே போல் சில காட்சிகள் வரும் கருணாஸ்.
விறு விறுப்பாக செல்ல வேண்டிய திரைக்கதையில் தேவையிலாத பாட்டுகளால் படம் மேலும் தொய்வடைகிறது. ஒளிப்பதிவு, இசை குறை சொல்லும் அளவிற்கு இல்லை. க்ளைமாக்ஸ் கச்சிதமாக இல்லை என்றாலும் ஒகே தான்.
த்ரில்லர் சண்டைக்காட்சிப் படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு இது நிச்சயமாக பிடிக்க வாய்ப்புள்ளது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:
G+ : https://plus.google.com/u/0/110626327113773224112                                                                 

No comments:

Post a Comment