Thursday 27 July 2017

After Many Problems, Vijay Sethupathi’s movie is going to hit the screen | பல பிரச்சனைக்கு பிறகு விஜய்சேதுபதி படம்


After Many Problems, Vijay Sethupathi’s movie is going to hit the screen | பல பிரச்சனைக்கு பிறகு விஜய்சேதுபதி படம்
After Many Problems, Vijay Sethupathi’s movie is going to hit the screen | பல பிரச்சனைக்கு பிறகு விஜய்சேதுபதி படம்
ஒரு வழியாக ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் படம், பல பிரச்சனைக்கு பிறகு வரும் இடம் பொருள் ஏவல்
சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்த படம் தான் இடம் பொருள் ஏவல். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை.
விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் இவர்கள் இரண்டு பெருக்கும் தற்போது தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதுமட்டும் இல்லாமல் சீனு ராமசாமி இயக்கி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை திரைப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது.
அதனால், இடம் பொருள் ஏவல் படத்திற்கு விநியோகஸ்தர்கள் மட்டும் இல்லாமல் ரசிகர்களிடமும் நல்ல  வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தை மும்பையில் திரையிட்டு காண்பித்த போது, மொழி தெரியாமல் கூட பலர் கிளைமாக்ஸில் எழுந்து நின்று கைதட்டியுள்ளனர்
இடம் பொருள் ஏவல் படம் மூலமாக தான் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், வைரமுத்துவும் முதல் முறையாக இணைத்துள்ளனர். இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இனிமையாக உள்ளது என இசை ரசிகர்கள் ஏற்கனவே பாராட்டியுள்ளனர்.

சீனு ராமசாமி அவர்கள் அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் மா மனிதன் படத்தையும் இயக்கவுள்ளார். இந்தப்படத்தின் வேலைகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இளையராஜாவும் யுவனும் சேர்ந்து இசையமைக்க போகின்றனர்.  

No comments:

Post a Comment