Tuesday, 11 July 2017

Bharani breaks the rule, Oviya is in danger zone again


Bharani breaks the rule, Oviya is in danger zone again
Bharani breaks the rule, Oviya is in danger zone again
Bharani may have been saved by the fans from elimination last week, but the inmates seem to be unhappy with him. The visibly upset actor now wants to leave the house. Bharani being cornered by the inmates and he is upset by the treatment being meted out to him. He even made a request before the camera to allow him to leave the house.

Bharani was also trying to climb the wall to and get out of the house. He complained about the inmates torturing him in the clip, Bigg Boss instructed hm to move back to confession room. After a while, Bharani was evicted from house as he has violated the rules. The actor went out of the house with full of joy, however no one apart from actress Oviya have consoled him. Later, housemate nominated Oviya to this week's eviction.
விரக்தியில் பிக் பாஸ் விதிமுறையை மீறிய பரணி, போட்டியை விட்டு வெளியேற்றம்


 நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றன. ஞாயிற்றுக் கிழமை அன்று நிகழ்ச்சியில் தோன்றிய உலக நாயகன் கமல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். அது மற்ற ஹவுஸ் மேட்ஸை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. எல்லாரும் பரணி வெளியேற்றப்படுவார் என நம்பிய நிலையில், திடீர் திருப்பமாக கஞ்சா கருப்பு வெளியற்றப்பட்டார்.

அதன் பின்னர், பரணியை தனிமை படுத்தினர் மற்ற ஹவுஸ் மேட்ஸ். பரணியால் பெண்களுக்கு ஆபத்து எண்று கஞ்சா கருப்பு கூறினார் என்று எல்லாரும் ஓரிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், பரணியை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், கடும் விரக்தி அடைந்த பரணி குடும்பமாக பழகியவர்களே தன் மீது அபாண்டமாக பழி சுமத்துவதாக  பிக் பாசிடம் முறையிட்டார். இதையெல்லாம் எண்ணி எண்ணி தமக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தன்னை உடனே வெளியேற்றவும் கேட்டுக் கொண்டார்.

ஆனால், பரணியின் கோரிக்கையை  ஏற்காத பிக் பாஸ் அமைதி காத்தார். பின்னர் வீட்டின் கூரை மீது ஏறி வெளியே மிதிக்க முயன்றார். அப்போது அவரை எச்சரித்த பிக் பாஸ் உடனே அவரை வீட்டுக்கு உள்ளே வர சொன்னார். சில மணிநேரம் கழித்து, போட்டியின் விதிமுறைகளை பரணி மீறியதால் அவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றுவதாக அறிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட பரணி, மகிழ்ச்சியுடன் பிக் பாஸ் வீட்டைவிட்டு கிளம்பினார். அப்போது யாரும் அவருக்கும் ஆறுதல் கூறவில்லை. நடிகை ஓவியா மட்டும் பை பரணி என்று அவரை அனுப்பி வைத்தார். அதன் பின்னர், கணேஷ் தலைவராக தேர்ந்துக்கப்பட்டார். பின்னர் நடந்த எலிமினேஷன் நாமினேஷனில், பலரும் ஓவியா மற்றும் ஜூலியை நாமினேட் செய்துள்ளனர். ஏற்கெனவே ஒரு கோடிக்கும் அதிகமான ஓட்டுக்களால் எலிமினேஷனில் இருந்து தப்பித்த ஓவியாவை பார்த்து எங்கே அவர் மக்கள் ஆதரவில் வெற்றி பெற்று விடுவாரோ என்ற பயத்தில்  மீண்டும் அவரை டேஞ்சர் சோனில் வைத்துக்ள்ளனர்.

No comments:

Post a Comment