Wednesday, 19 July 2017

Vishal - Varalakshmi Marriage Confirm


Vishal - Varalakshmi Marriage Confirm
Vishal - Varalakshmi Marriage Confirm

விஷால், வரலட்சுமி திருமணம் உறுதி


நடிகர் விஷாலும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் காதலித்து வருவதாக பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு வந்தன. முதலில் மறுத்து வந்த இந்த காதல் ஜோடி பிறகு பதில் எதுவும் சொல்லாமல் மறுத்து வந்தனர். இடையில் இருவரும் பிரிந்துவிட்டதாக வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில் விஷாலே தங்களது காதலை இலை மறை காயாக தெரிவித்து வந்த நிலையில், இன்று நடைபெற்ற 'துப்பறிவாளன்' பட டீசர் வெளியீட்டின் போது பேசிய தயாரிப்பாளர் நந்தகோபால் விஷாலை பற்றி பேசிய போது அவர் காமராஜர் போன்றவர் பொது வாழ்க்கையில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். அவருடைய தலைமையில் தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் நன்றாக செயல் பட்டு வருகிறது என்றார். இந்த பேச்சை கேட்டவுடன் அரங்கில் பெரிய சிரிப்பலையும், கூச்சலும் உருவானது. ஏனென்றால் கர்ம வீரர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட காமராஜர்  இந்தியாவின் மிகப்பெரிய தலைவர். மக்கள் நலனில் பெரிய அக்கறை கொண்டிருந்த அவர் கல்யாணம் செய்யாமலேயே வாழ்ந்தவர்.


பின்னர் பேசிய 'விஷால் ஃபில்ம் ஃபேக்டரி' தயாரித்த முதல் படமான பாண்டிய நாடு' நல்ல பெயரை பெற்றுதந்தது. அதே போல் இந்தப்படம் என்னுடைய படங்களிலேயே முக்கியமான படமாக இருக்கும்.  கடந்த 8 வருடமாக நானும், இயக்குனர் மிஷ்கினும் படம் பண்ணூவதாக முயற்சி செய்தோம் முடியவில்லை. கடசியாக இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளோம். என்னை காமாராஜர் என்று குறிப்பிட்டனர், நான் அவரைப் போல் பொது வாழ்க்கையில் நடந்து கொள்வேன். ஆனால் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கமுடியாது.  என்னுடைய அப்பாவும் விடமாட்டார். லட்சுமிகரமான அந்த பெண்ணும் விடமாட்டார் என கிசு கிசு பாணியில் தெரிவித்தார். இதே போல் கடந்த வாரம் ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய   விஷால், நான் இன்னொரு முக்கியமான விழாவுக்கு செல்ல வேண்டும் . என  வரலட்சுமி சரத்குமார் நடத்திய ஒரு நடன நிகழ்ச்சியை சூசகமாக கூறியது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment