வில்லத்தனம் கலந்த ஹன்சிகா
வில்லத்தனம்
கலந்த ஹன்சிகா
மலையாளத்தில்
மோகன்லால், விஷால் நடிக்கும் படம்
"வில்லன்". ஹன்சிகா முதல் முறையாக
இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் காலடி
வைத்திருக்கிறார். இதுபற்றி ஹன்சிகா கூறுகிறார்..
"எனது
திரை உலக பயணத்தில், ஒரு
முறையாவது மலையாள படத்தில் நடிக்க
வேண்டும் என்று என் அம்மா
சொல்வார். அதற்கு ஏற்றபடி இதுவரை
நான் நடிக்காத ஒரு வேடம் பற்றி
டைரக்டர் உன்னிகிருஷ்ணன் என்னிடம் சொன்னார். அதை என்னால் ஒதுக்க
முடியவில்லை. முழுவதும் நெகட்டில் என்று சொல்ல முடியாத
வேடம். என்றாலும், கொஞ்சம் வில்லத்தனம் கலந்த
வேடத்தில் தான் நடிக்கிறேன். எனக்கு,
மறுநாள் தான் விஷால் இந்த
படத்தில் நடிக்க வந்தார்.
அங்கிருந்த
அனைவரிடமும், "எங்கே கசமுசா என்று
சத்தம் வருகிறதோ, அங்கு ஹன்சிகா இருக்கிறார்
என்று அர்த்தம்" என்று என்னைப்பற்றி கிண்டல்
செய்து கொண்டிருந்தார். மலையாளம் பேசுவதற்கு கஷ்டமாக இருக்கும் என்று
என் நண்பர்கள் என்னை பயமுறுத்தினார்கள். ஆனால்,
இந்த படத்தின் இயக்குனர் உன்னிகிருஷ்ணன் அந்த பயத்தை போக்கி
விட்டார்".
No comments:
Post a Comment