Monday 17 July 2017

கருப்பன் படத்துக்கு தடை! | Vijay Sethupathi’s Karuppan Movie Banned


கருப்பன் படத்துக்கு தடை! | Vijay Sethupathi’s Karuppan Movie Banned
கருப்பன் படத்துக்கு தடை! | Vijay Sethupathi’s Karuppan Movie Banned
ஶ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் மூலம் .எம்.ரத்னம் தயாரித்து வரும் படம்கருப்பன்’. விஜய் சேதுபதி,பாபிசிம்ஹா,தன்யா நடித்துவரும் இப்படத்தை இயக்கி வருபவர்ரேணிகுன்டாபடத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம். தேனி மாவட்டத்தில் நடந்த படப்பிடிப்பில் காடப்பட்டுள்ள இந்தக் காளை கொம்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காத்தான் என்பவருக்கு சொந்தமானது.
கருப்பன் படத்தின் ஒரு காட்சியில் காளை கொம்பனை விஜய் சேதுபதி அடக்கிவிட்டதாக கிராபிக்ஸ் காட்சியில் உருவக்கப்பட்டிருக்கிறது. இதுவரை யாரும் அடக்க முடியாத கொம்பன் காளைக்கு ரசிகர்களும் ரசிகர் மன்றங்களும் உள்ளது. இந்த கிராபிக்ஸ் காட்சி கொம்பன் காளையின் உரிமையாளர் காத்தானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் கொம்பன் காளையின் உரிமையாளர் காத்தான் கொம்பனை கிராபிக்ஸில் தவறாக காட்டியதற்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்கக்கோரி விஜய்சேதுபதி, இயக்குனர் பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் .எம்.ரத்னம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

No comments:

Post a Comment