Rubaai Movie Review | Chandran | Anandhi | Prabhu Solomon | D Imman | Rubaai Tamil Movie Review
Rubaai Movie Review | Chandran | Anandhi | Prabhu Solomon | D Imman | Rubaai Tamil Movie Review
Director M.Anbazhagan who made his debut through the critically acclaimed super hit 'Sattai' in 2012 has directed 'Rubaai' as his second film after a gap of four years.
Produced by director Prabhu Solomon under his God Pictures banner, 'Rubaai' stars Chandran and Anandhi in lead roles. The duo made their debut with 'Kayal' directed by Prabhu Solomon in the year 2014. The supporting cast includes Chinni Jayanth, Kishore Ravichandran, RNR Manohar, G.Marimuthu, Vetrivelraja and many others.
D.Imman has rendered the music score for this film. Cinematography has been done by V.Ilaiayraja. R.Nirmal who made his debut as an Editor with 'Sattai' has handled the Editing for this film too.
அரசு பள்ளிகளின் அவலத்தை தன்னுடைய 'சாட்டை' படத்தின் மூலம் விளாசிய இயக்குனர் அன்பழகன் இயக்கியுள்ள படம் 'ரூபாய்'. இயக்குனர் பிரபுசாலமன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கயல் சந்திரன், ஆனந்தி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
பணத்தேவை என்பது எல்லோருக்கும் அத்தியாவசியமான ஒன்று. அதை நேர்வழியில் சம்பாதிக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சொல்லும் படம்.
கயல் சந்திரன் அறிமுக நடிகர் கிஷோர் ரவிசந்திரன் இருவரும் பார்ட்னர்ஷிப் முறையில் கடன் மூலம் மினி சரக்கு லாரி ஒன்றை வாங்குகின்றனர். கோயம்பேட்டில் சரக்கு ஏற்றுவதற்காக காத்திருக்கின்றனர். அந்த நேரத்தில் சின்னிஜெயந்த் வீட்டு சாமான்களை ஏற்றிசெல்வதற்காக வண்டி தேடுபவரை பார்த்ததும் இருவருக்கும் ஆனந்தம் முதல் லோடு கிடைத்த சந்தோஷம்.
சின்னி ஜெயந்த் வீட்டிற்கு சாமான்களை ஏற்ற செல்லும் போது அங்கே கயல் ஆனந்தியை கண்டதும் காதல் வயப்படுகிறார் சந்திரன்.
லாரீயில் சாமான்களை ஏற்றி புது வீடு கிடைக்காத சூழ்நிலையில் சின்னிஜெயந்திற்கும் சந்திரன் நண்பனுக்கும் சண்டை, போலீஸ் என செல்கிறது. பிறகு சின்னி ஜெயந்த் சொந்த ஊருக்கு புறப்படுகின்றனர். போகும் வழியில் போலீஸுக்கு பயந்து கொள்ளையடித்த பணத்தை ஹரிஷ் உத்தமன் இவர்களின் லாரியில் வைத்து விடுகிறார்.
சின்னிஜெய்ந்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடும் அவரைக் காப்பாற்ற பணத்தேவை ஏற்படும்போது லாரியில் இருக்கும் பணம் இவர்களின் கண்களில் பட காப்பாற்றபடுகிறார். அதன் பிறகு இஷ்டத்திற்கு செலவு செய்கின்றனர். வீடு, புது ஹோட்டல் என செலவளித்து வரும் இவர்களை கொள்ளைக்காரன் ஹரிஷ் உத்தமன் பிடித்து விடுகிறான். செலவளித்த பணத்தை திரும்பக்கேட்கும் ஹரிஷ் உத்தமனுக்கு பணத்தை திரும்பக்கொடுத்தார்களா? போலீஸ் ஹரிஷ் உத்தமனை பிடித்ததா? என்பது க்ளைமாக்ஸ்.
இயல்பாக பயணிக்கும் திரைக்கதை அவ்வப்போது சினிமா தனத்துக்குள் நுழைகிறது. கிராமமக்களின் வாழ்க்கையை அழகாக படம்பிடித்துள்ளார் இயக்குனர் அன்பழகன். இயல்பான காதலர்களாக சந்திரனும் , ஆனந்தியும் கவனிக்க வைக்கிறார்கள். அறிமுக நடிகர் சந்திரன் சிறப்பாக நடித்துள்ளார். ஹரிஷ் உத்தமன் மிரட்டுகிறார். தம்பி ராமய்யாவுக்கு ஒரு கும்கி போல சின்னி ஜெயந்துக்கு 'ரூபாய்' நல்ல பெயரை கொடுத்திருக்கிறது.
மூனாறின் அழகை அழகாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் வி.இளையராஜா. டி.இமான் ஒரே மாதிரியான முந்தைய படங்களின் இசையை கொடுத்திருக்கிறார்.
க்ளைமாக்ஸ் காட்சிகளை கமர்ஷியலாக வடிவமைத்திருப்பதை தவிர்த்திருந்தால் சிறப்பான படமாக இருந்திருக்கும்.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
No comments:
Post a Comment