Wednesday 19 July 2017

தீவீர அரசியலுக்கு தயாராகும் கமல் | Kamal Haasan to enter politics


தீவீர அரசியலுக்கு தயாராகும் கமல் | Kamal Haasan to enter politics
தீவீர அரசியலுக்கு தயாராகும் கமல் | Kamal Haasan to enter politics           
தீவீர அரசியலுக்கு தயாராகும் கமல்!| Tamil Cinema News | Kollywood News | Tamil Cinema Seithigal
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  மறைவுக்கு பின்னர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி நடத்தி வரும் நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியல் பற்றி பகிரங்கமாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் ஆளும் அதிமுக அமைச்சர்கள் கமல்ஹாசனின் கருத்துக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்அமைச்சர்களின் கருத்துக்கு திமுக வின் செயல் தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில கவிதைகளை பதிவிட்டு தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதில் 'ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர்  தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது. இருக்கமுடியாது.
'அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழருக்கும் விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்' இதன் உச்சக்கட்டமாக
தோற்றிருந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடி பணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா.
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்
அன்புடன்
கமல்ஹாசன்.
இந்தக் கவிதைக்கு பலரும் தங்களுக்கு புரிந்த வகையில் அர்த்தம் கொண்டு வருகின்றனர்கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவது குறித்து பல தலைவர்களும் பல கருத்துக்களை கூறி வருவதால் அரசியலில் பரப்பரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment