காஜலின் திருமண கண்டிஷன் | Kajal Agarwal’s Shocking Condition Revealed
காஜலின்
திருமண கண்டிஷன் | Kajal Agarwal’s Shocking
Condition Revealed
தமிழ்,
தெலுங்கு, இந்தியில் நடித்து வருபவர் காஜல்
அகர்வால். திரை உலகில் காலடி
வைத்து 10 வருடங்கள் ஆனாலும் முன்னணி நடிகையாகவே
இருந்து வருகிறார்.
தற்போது,
தமிழில் அஜித்துடன் 'விவேகம்', விஜய்யுடன் 'மெர்சல்' தெலுங்கில் ராணாவுடன் 'நேனேராஜூ நேனேமந்திரி' உள்பட பல படங்களில்
நடித்து வருகிறார். திருமணம் பற்றி இதுவரை எதுவும்
கூறாமல் இருந்த காஜல் அகர்வால்,
தனது விருப்பத்தை மனம் திறந்து கூறி
இருக்கிறார்.
அவர்
சொல்கிறார்....
"சினிமாவில்
பிசியாக நடித்து கொண்டு இருக்கிறேன்.
எனவே, இதுவரை திருமணம் பற்றி
யோசிக்கவில்லை. ஆனால், நிச்சயமாக காதல்
திருமணம் செய்ய வேண்டும் என்பது
தான் எனது ஆசை. எனவே,
எனக்கு பிடித்தமானவரை நான் சந்திக்கும் பொது
அவரை காதலித்து திருமணம் செய்வேன்.
அது போல் நான் காதலிப்பவர்
திரை உலகை சார்ந்தவராக இருந்தாலும்
சரிதான். அவர் நல்லவராக இருந்தால்
எந்ததுறையை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை திருமணம் செய்து
கொள்வேன்.
நான் காதலிப்பவர் பெரிய அழகனாக இருக்கிறாரோ
இல்லையோ ஆனால், அவர் கண்டிப்பாக
6 அடிக்கும் மேல் உயரம் உள்ளவராக
இருக்க வேண்டும். இதில் நான் உறுதியாக
இருக்கிறேன்".
யாரை குறித்து வைத்து இதை சொல்கிறாரோ?.
No comments:
Post a Comment