Friday 14 July 2017

Gemini Ganeshanum Suruli Raajanum Review | Atharvaa, Regina, Aishwarya Rajesh, Pranitha, Soori


Gemini Ganeshanum Suruli Raajanum Review | Atharvaa, Regina, Aishwarya Rajesh, Pranitha, Soori

Gemini Ganeshanum Suruli Raajanum Movie Review | Atharvaa,Soori, Regina Cassandra, Aishwarya Rajesh, Pranitha, Aaditi Pohankar
Gemini Ganeshanum Suruli Raajanum is a crime comedy film, written and directed by Odam Ilavarasu and produced by T. Siva. The film features Atharvaa and Soori in the title roles, while Regina Cassandra, Pranitha, Aishwarya Rajesh and Aaditi Pohankar play the leading actresses. This movie has a bit of a remake to Manmadhan.
அதர்வாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய பழைய காதலிகளுக்கு திருமண பத்திரிகை கொடுக்க செல்லும் போது உதவிக்கு வரும் சூரியுடன் தன்னுடைய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறார். என்ன சேரனோட 'ஆட்டோகிராப்' மாதிரி இருக்கா? அதேதான் ஆனா இந்தப்படத்தை அந்தப்படத்தோட எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாது.
'அம்மா கிரியேஷன்ஸ்' சிவா, தீவிரமான ஜெமினிகணேசன் ரசிகர். இதனால் தனது மகன் அதர்வாவுக்கு ஜெமினிகணேசன் என பெயரிடுகிறார். அவ்வபோது ஜெமினிகணேசனின் படங்களை பார்த்து வளரும் அதர்வா இளைஞனான பிறகு பெண்களின் மனதை மயக்கி காதலித்துவிட்டு கை கழுவுகிறார். இது அவரது அப்பா சிவாவுக்கு தெரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை.
ரெஜினா கஸண்ட்ரா, ப்ரணீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி போஹங்கர் இந்த நான்கு பெண்களையும் காதலிக்கும் அதர்வா யாரை திருமணம் செய்து கொள்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.
இயக்குனர் ஓடம்.இளவரசு, 'ஆட்டோகிராப்' படத்தை காமெடியாக சொல்ல முயன்றது சரிதான் ஆனா அதை ஹானஸ்ட்டா செய்யவேண்டாமா? ஏனோ தானோவென்று சொல்வதுடன் ஜெமினிகணேசனின் பெயரையும் கெடுத்து, சுருளிராஜனின் பெயரையும் கெடுத்து இருக்கிறார். அழுத்தமே இல்லாத காட்சிகளால் தியேட்டரில் ரசிகர்கள் படம் ஆரம்பித்த 1/2 மணி நேரத்திலேயே தூங்கி விடுகிறார்கள். பலர் நெளியவும் செய்கிறார்கள்.
அதர்வாவை பார்த்தவுடன் காதல் கொள்ளும் ரெஜினா கஸண்ட்ரா, ப்ரணீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி போஹங்கர் இந்த நான்கு பெண்களும் அவரை விரும்புவதற்கான காரணம் மொக்கையோ மொக்கை. ஆங்காங்கே பெண்களை இழிவு படுத்தி சந்தோஷம் கண்டிருக்கிறார் இயக்குனர் ஓடம்.இளவரசு. சூரியின் மனைவியாக அதிதி போஹங்கர் கேரக்டரை ரொம்பவே டேமேஜ் செய்திருக்கிறார்கள்.
அதர்வா ரொம்ப எனர்ஜியாவே காணப்பட்டாலும் அவரால் ரசிகர்களை ஈர்க்க முடியவில்லை. ரெஜினா கஸண்ட்ரா, ப்ரணீதா, அதிதி போஹங்கர் ஆகியோரின் கவர்ச்சி எடுபடவில்லை. சூரி ரசிகர்களை சிரிக்கவைக்க என்னன்னவோ செய்கிறார். ரசிகர்களோ பூதத்தை பார்த்த குழந்தைகள் போல் அரண்டு போஇ கிடக்கிறார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டு காட்சிகளில் மட்டுமே சிரிப்பு வரவைக்கிறார்.
டி இமானின் பாடல்கள் கேட்ட மாதிரியாகவே இருக்கிறது.படத்திற்கு இவரது இசை எந்த விதத்திலும் உதவவில்லை. ஶ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு சொல்லி கொள்ளும் படியில்லை.
மொத்தத்தில் இயக்குனர் ஓடம் இளவரசு நல்ல தயாரிப்பாளர், நடிகர் ,நடிகைகள் என பெரிய வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயண்படுத்திகொள்ளாமல் விட்டுள்ளார்.
ஜெமினியின் காதலுமில்லை.. சுருளியின் காமெடியும் இல்லை..
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:

No comments:

Post a Comment