Saturday 15 July 2017

விஜய்-அஜித் வரிசையில் சிவா


விஜய்-அஜித் வரிசையில் சிவா
விஜய்-அஜித் வரிசையில் சிவா
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் "வேலைக்காரன்". இதில் முதன் முதலாக நயந்தாராவுடன் ஜோடி சேர்ந்து "டூயட்"பாடி இருக்கிறார். மலையாள நடிகர் பகத்பாசில் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் ஜோடியாக இருக்கும் படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே, பிரபல டி.வி. இதன் தொலைக்காட்சி உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறது.

பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "வேலைக்காரன்" படத்தின் வெளிநாட்டு வினியோக உரிமையும் அதிக தொகைக்கு போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே இந்த அளவு வியாபாரம் ஆகி இருக்கிறது. இப்பொது சிவகார்த்திகேயனும் இந்த வரிசையில் இடம் பிடித்து இருக்கிறார்.

No comments:

Post a Comment