Sunday, 16 July 2017

டிக்கெட் விலை குறைப்பு |Ticket Prices cut down


டிக்கெட் விலை குறைப்பு |Ticket Prices cut down
டிக்கெட் விலை குறைப்பு |Ticket Prices cut down
தமிழ்த்திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி.ராமநாதன். இவர் நிர்வகித்து வரும் ‘அபிராமி’ திரையரங்கு சென்னையின் முக்கியமான தியேட்டர்களில் ஒன்று. ஜூலை 1 முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி மூலம் சினிமா டிக்கெட்டுகளின் விலை உயர்ந்தது. இதனால் தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்களின் வருகை கனிசமாக குறைந்துள்ளது.
இந்நிலையில் இணைய வழி மூலமாக டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவர்களுக்கு மேலும் அதிக சுமை ஏற்ப்பட்டது. அதாவது கவுன்ட்டரில் டிக்கெட் வாங்குபவர்களுக்கு 120 ரூபாய் டிக்கெட், ஜிஎஸ்டி சேர்த்து 153 ரூபாயாக அதிகரித்தது. இணையத்தில் புக் செய்யும் போது 153 ரூபாயுடன் இணைய சர்வீஸ் கட்டணம் 30 சேர்த்து 183 ரூபாயாக உயர்ந்தது. இது இணைய வழி மூலமாக படம் பார்ப்பவர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியது.
இதை கருத்தில் கொண்ட தமிழ்த்திரைப்பட வர்த்தக சபையின் தலைவர், அபிராமி ராமநாதன் தன்னுடைய அபிராமி திரையரங்கில் இணைய சர்வீஸ் கட்டனத்தை முற்றிலுமாக ரத்து செய்துள்ளார். இதனால் இணைய வழியாக டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்திலேயே முதன் முறையாக இணைய சர்வீஸ் கட்டணம் ரத்து செய்துள்ளது குறிப்பிடதக்கது. இதை வரவேற்று தயாரிப்பாளர்கள் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியபோது. தமிழ் சினமாத்துறை பலபிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் ஜிஎஸ்டியின் மூலம் டிக்கெட் கட்டணம் உயர்ந்தது. இதை கருத்தில் கொண்டு அனைத்து திரையரங்குகளுக்கும் முன்னுதரனமாக இருந்து இணைய சர்வீஸ் கட்டணத்தை ரத்து செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. மற்ற் அதிரையரங்குகளும் இதை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் படம் பார்க்கும் பொதுமக்கள் பயண்பெறுவார்கள்.’ என கூறினார்.

No comments:

Post a Comment