Tamilnadu Cinema Theatres opens today
Cinema Theatres opens today
திரையரங்கு
இன்று முதல் செயல்படுகிறது
கடந்த
3ஆம் தேதி கேளிக்கை, மற்றும்
GST வரிக்கு எதிராக திரையரங்கங்கள் கால
வரையின்றி மூடப்பட்டது 100 ஆண்டுகால
தமிழ்நாட்டு சினிமா வரலாற்றில் இதுவரை
நடந்திடாத ஒன்று. கடந்த 4 நாட்களில்
நேரடியாக திரையரங்கங்களுக்கு சுமார் 80 கோடிவரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
மறைமுக இழப்பு சுமார் 15 கோடிவரை
இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
அரசு தரப்புடன் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக
சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளது இதனால்
இன்றுமுதல் திரையரங்குகள் வழக்கம்போல செயல்படுகிறது. இது குறித்து திரையரங்க
உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அபிராமிராமநாதன் தெரிவித்ததாவது..
பொதுமக்களின்
ஒத்துழைப்புக்கும், பொறுமைக்கும் நன்றி. கடந்த நான்கு
நாட்களாக சுமார் 1000 திரையரங்குகள் மூடபட்டிருந்தது. இதனால் பல கோடி
ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி, கடம்பூர்
ராஜு மற்றும் அரசு அதிகாரிகள்
எங்களுடைய கஷ்டங்களை புரிந்து கொண்டனர்ஷதற்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதாகவும்
நம்பிக்கை தெரிவித்துள்ளனர். திரைத்துறையினர் சார்பில் 8 பேர் கொண்ட குழு
அமைக்கப்படுகிறது. இந்தக்குழு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி
முடிவெடுக்கும். என்றார்.
இதற்கிடையே
மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட்
கட்டணம் முன்பிருந்தது போல் தொடரும். அதிக
பட்சம் டிக்கெட் விலை 120 ரூபாயுடன் 28% GST வரி 33.06 சேர்த்து 153 ரூபாய் ஆகவும்
100 ரூபாய் டிக்கெட் கட்டணம் 128 ரூபாயாகவும், குறைந்த பட்சமாக இருந்த
10 ரூபாய் டிக்கெட் கட்டணம் 11 ரூபாய் 80 காசாகவும் வசூலிக்கப்படும். தமிழக அரசின் 30% கேளிக்கை
வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment