Julie make more problem in Bigg Boss House
Julie make more problem in Bigg Boss House
Day by day, heat in Bigg Boss Tamil is getting increased. They had luxury budget task for second week, singing Tamil thaai vaazthu. Many have completed the task
after practising, however Gayathri felt that Julie istargetting her with sarcastic statements. Gayathri takes offence of Julie looking at during chance to sing the song.
She accuses Julie of looking at her sarcastically while mentioning that she had gone to a Anglo-Indian school.
While Julie breaks into tears in the bedroom after this, Gayathri goes on to explaining the event to Namitha. A crying Julie is upset about Gayathri telling her that
she has changed and become sarcastic after not being nominated for this week elimination. Oviya feels sorry for Bharani and feels that he is being cornered my
most of the housemates of Bigg Boss. Raiza and Arav share the same feeling and all three don't feel good about it.
Harathi feels that Julie is the male version of Bharani and says that she's faking things to continue in the house. Most of the house mates changed their target to
Julie from Bharani. However, we are yet to know if Bharani could succeed in this week's eviction.
மீண்டும் பிரச்னை கிளப்பும் ஜூலி
நாளுக்கு நாள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பிரச்சனையை கிளப்பி வருகிறார் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி. நேற்றைக்கு நடந்த இரண்டாம் வார லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அனைவரும் மனப்பாடம் செய்து பாட வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது, தமிழ் தெரியாதவர்களுக்காக, நான்கு வரிகள் மட்டும் பாடினால் போதும் என்று ஒரு சலுகை வழங்கப்பட்டது.
அதன்படி அனைவரும் பாடலை பாடினார். காயத்ரி ரகுராம், தான் பள்ளியில் சமஸ்கிருதம் படித்ததால் தனக்கு தமிழ் உச்சரிப்புகள் சரியாக இருக்காது எனக் கூறி முழு பாடலையும் பாடினார். அதன் பின்னர் பாடிய ஜூலி, தான் ஆங்கிலோ இந்தியன் படித்தாலும் பள்ளியில் முதல் வேலையாக தமிழ்ழ்த்தாய் வாழ்த்துப்பாடலைஅனைவரும் பாடுவோம் என்று கூறி பாடலை பாடினார். அப்போது தான் வெடித்தது பிரச்னை. ஜூலி, கூறும் போதும் தெனாவட்டாக தன்னை பார்த்ததாக காயத்ரி புகார் கூறினார்.
தொடர்ந்து ஜூலியிடம் வாக்குவாதம் செய்த காயத்ரி, "எலிமினேஷனில் இல்லை என்றதும், திமிர் ஆகி விட்டதா, நீ உண்மையாக இருந்தால் தான் இந்த போட்டியில் தொடர முடியும்". இதைக் கேட்டதும் அழுதுகொண்டே பெண்கள் அறைக்கு சென்ற ஜூலி அங்கிருந்த ஓவியா மற்றும் ரைசாவிடம் அழுது புலம்பினார். பின்னர், சமையலறையில் நமீதாவிடம் பேசிக்கொண்டிருந்த காயத்ரி, ஜூலி ஒரு மட்டமான குணம் கொண்டவர் என்று கூறினார்.
அதற்கு பின்னர், ஜூலி கிட்டத்தட்ட பரணியின் ஆண் வடிவம். பரணியாவது ஓரளவு உண்மையாக இருக்கிறார் ஆனால், ஜூலி அப்படி இல்லை என்று அனைவரும் ஜூலியை டார்கெட் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்தவாரம், பரணி எலிமினேட் ஆகாமல் தப்பிப்பாரா என்பது இன்னும் தெரியாத நிலையில், பிக் பாஸ் வீட்டில் மீண்டும் பெரிய பிரச்சனையை கிளப்பி வைத்திருக்கிறார் ஜூலி. ஒருவேளை, பரணி எலிமினேட் ஆனால், ஜூலிக்கு வேறு யாரும் சப்போர்ட் செய்ய மாட்டார்கள் என்பது நிதர்சனம்.
No comments:
Post a Comment