Wednesday, 5 July 2017

Super Star Rajini's first political move


Super Star Rajini's first political move
Super Star Rajini's first  political move
Super Star Rajinikanth has registered his anger over the new tax system introduced by Central and State government. Earlier, 28% GST was imposed on theaters and later TN State has introduced 30% corporation Tax.In his tweet," Keeping in mind the livelihood of Lakhs of people in the tamil film industry, I sincerely request the TN GOVT to seriously consider our plea"

Rajini's close friend Ulaga Nayagan Kamal has welcomed his tweet and shared it in his page. He also thanked Rajini for his gesture, "Thanks Rajni avaragaLay for voicing your concern. Lets request first as gentlemen should. Then we shall see. @superstarrajini & TN .Govt".
சூப்பர்ஸ்டார் ரஜினியின் முதல் அரசியல் நடவடிக்கை
சமீபத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய ஜிஎஸ்டியில் திரை அரங்கங்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. திடீரென தமிழக அரசும்  நகராட்சி வரி என்ற பெயரில் 30 சதவீதம் வரி விதித்துள்ளது. இதன் மூலம், ஒரு டிக்கெட்டிற்கு 58 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இந்த வரிகளை கண்டித்து  திரையரங்கங்கள் கால வரையின்றி கடந்த திங்கள் முதல் மூடப்பட்டுள்ளன.

இந்த புதிய வரிகளை நீக்க வேண்டும் குறைந்த பட்சம் குறைக்க வேண்டும் என்று திரைத் துறையில் இருந்து கோரிக்கை வலுத்து வருகிறது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வரிகளை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார். தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினி, "லட்சக்கணக்கான திரைத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய வரிகளை அரசுகள் திரும்பப்பெற வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக அரசி பரிசீலிக்கும் என்று நம்புகிறேன்"என்று கூறியுள்ளார்.

ரஜினியின், இந்த ட்வீட்டை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்துள்ள உலகநாயகன் கமலஹாசன் இந்த பிரச்சனைக்காக குரல் கொடுத்த ரஜினி அவர்களுக்கு நன்றி. ஒரு ஜென்டில்மேனாக நாம் நமது கோரிக்கையை அரசுக்கு வைத்துவிட்டோம், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பின்னர் என்ன செய்யலாம் என்று முடிவு செய்வோம்" என்று கூறியுள்ளார்.  

No comments:

Post a Comment