Friday 10 March 2017

Actor Simbhu leaks his own song

Actor Simbhu leaks his own song
Actor Simbhu leaks his own song
இணையத்தில் தன் பாடலை தானே லீக் செய்த சிம்பு 
நடிகர் சிம்பு சினிமாத் துறையில் பல்வேறு பிரிவுகளிலும் ஈடுபாடு உள்ளவர். நடிப்பு, இயக்கம் மட்டுமல்லாமல் பல படங்களில் பாடல்களையும் பாடி வந்தார். திடீரென அனைவரையும் ஆச்சர்யபடுத்தும் வகையில் இசை அமைப்பாளராகவும் களம் இறங்கி உள்ளார் நடிகர் சிம்பு. அவரது தந்தையான டி.ராஜேந்தர் மற்றும் தம்பி குறளரசனும் ஏற்கெனவே இசை அமைத்த அனுபவம் உள்ளவர்கள்.

சிம்புவின் நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானம் நடிக்கும் படம் 'சக்க போடு, போடு ராஜா', இந்த படத்திற்குத் தான் இசை அமைக்கிறார் நடிகர் சிம்பு. தற்போது இந்த படத்தின் இசை அமைப்பில் கவனம் செலுத்தி வரும் சிம்பு, சமீபத்தில் தான் இசை அமைத்துள்ள 'காதல் தேவதை' எனும் பாடலின் சில பகுதியை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார். இந்த பாடலை, சிம்புவுடன் இனைந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து பாடியுள்ளார். காதல் தேவதை பாடல் தற்போது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தான் இசை அமைக்கும் 'சக்க போடு, போடு ராஜா'படத்தில் புத்தம் புது விஷயம் ஒன்றையும் செய்துள்ளார் நடிகர் சிம்பு. படத்தில் வரும் ஒரு குத்துப்பாடலை தன் பெற்றோரான டி.ராஜேந்தர் மற்றும் உஷா அவர்களை பாட வைத்துள்ளார். இந்த பாடல் நிச்சயம் மாபெரும் ஹிட்டாக அமையும் என்றும் கூறியுள்ளார் சிம்பு. 

Actor Simbu is a multi talented person. Apart from acting he has also tried singing, directing movie, costume designing. Now he has taken a new avatar as music compose for his close friend actor Santhaanam's movie Sakka podu podu Raaja.

Simbu is concentrating on Sakka podu podu Raaja and roped in some big time singers and musicians in his debut movie as a composer. Recently the actor has posted video along with composer Yuvan Shankar Raja singing a song named 'Kaadhal Dhevadhaiye'. Simbu also have made his parents T.Rajendar and Usha to sing a peppy number in the movie. 

No comments:

Post a Comment