Friday 10 March 2017

Actor Suriya's praise for Maanagaram

Actor Suriya's praise for Maanagaram
Actor Suriya's praise for Maanagaram
மாநகரம் படத்தை பாராட்டி தள்ளிய நடிகர் சூர்யா 
சமீபத்தில் வெளியான மாநகரம் திரைப்படம் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. புதுமையான திரைக்கதையுடன் அமைந்துள்ள இப்படம், இந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது.
படத்திற்கு வந்த வரவேற்பை பார்த்து, நேற்றைக்கு மாநகரம் படத்தை பார்த்திருக்கிறார் நடிகர் சூர்யா. பார்த்த உடனேயே அவருக்குப் பிடித்துவிட்டதாம். உடனே படக்குழுவினரைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த கொண்டுள்ளார். மேலும், படத்தினைப் பற்றி தன்னுடைய ட்விட்டரிலும் பதிந்துள்ளார் நடிகர் சூர்யா. "மாநகரம் திரைப்படம் பார்த்தேன். படம் மிக அருமையாக இருந்தது. திரைக்கதை மிகவும் நேர்த்தியாகவும், ஒன்றிப்போகக் கூடியதாகவும் இருந்தது" என தன் பாராட்டைப் பதிவு செய்துள்ளார் நடிகர் சூர்யா.
 
மாநகரம் படத்தில் இளம் நடிகர்களான சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் மூலம் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். 

Actor Suriya has watched the recent sensational movie 'Maanagaram' and praised the makers. He tweeted 'Just watched Maanagaram. Well made film with a very engaging screenplay'. The actor also called the director and congratulated him. Young actors Sandeep Kishan, Sri and Regina have acted in Maanagaram which directed by newcomer Lokesh Kanagaraj and produced by S. R. Prabhu's production house Potential Studios.

No comments:

Post a Comment