Monday, 13 March 2017

Actress Aiswarya Rajesh casts opposite actor Vikram

Actress Aiswarya Rajesh casts opposite actor Vikram

Actress Aiswarya Rajesh has debuted in 2011 in Tamil films, however she came into limelight after the 2015 release Kaakkaa muttai. Since then she has been acting in films that have importance of her characters. The actress is extremely happy as she is casted in Gautham Vasudev Menan's recent action thriller Actor Vikram's Dhuruva Natchathiram. The movie is expected to filmed mostly in US and have already released a teaser featuring Vikram. 
விக்ரம் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் 
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 2011ஆம் ஆண்டு முதலே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். ஆனால், 2015இல் வெளியான காக்கா முட்டை படத்தின் மூலமே புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.  பின்னர் நல்ல நல்ல கதாப்பாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யாவிற்கு அடுத்த மிகப்பெரிய படத்துக்கான அழைப்பு வந்துள்ளது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஐஸ்வர்யா. 

நீண்ட கால பேச்சுவார்தைக்குப் பின் இயக்குனர் கௌதம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் நடிகர் விக்ரம். துருவ நட்சத்திரம் என பெயரிடப்பட்ட இந்த படம் பெரும்பாலும் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளது. ஏற்கெனவே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விக்ரமுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சிறுசிறு படங்களை நடித்துவந்த ஐஸ்வர்யாவிற்கு இதுவே இவர் நடிக்கும் முன்னணி நடிகர் ஒருவரின் படமாகும். நடிகர் விக்ரமுடன் நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார் ஐஸ்வர்யா. சமீபத்தில் இந்த படத்துக்கான போட்டோ ஷூட் நடந்தது, அதில் எடுத்த சில படங்களையும் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. 

No comments:

Post a Comment