High protests in Neduvasal
High protests in Neduvasal
வலுவடையும் நெடுவாசல் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அரித்தது முதலே எதிர்ப்புகள் கிளம்பின. இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டால் என்னென்ன பாதிப்புகளை அந்த பகுதி அடையம் என்பதை நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் மக்களுக்கு எடுத்துரைக்க ஆரம்பித்த பின்னர் விழிப்புணர்வு ஓங்கி போராட்டம் வலுப்பெற்றது.
இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் அழியும் என்ற கூற்றை மறுத்த பாஜக தலைவர்கள், நாட்டுக்காக இந்த திட்டத்தை நெடுவாசல் மக்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என கூறி மக்களின் கண்டனங்களை சம்பாதித்தனர். ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக பங்கேற்றனர். அதே போல் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க பல இளைஞர்களும் நெடுவாசல் நோக்கிப் பயணப்பட்டுள்ளனர். போராட்டத்திற்கு வருபவர்களை அங்கங்கே மடக்கி திருப்பி அனுப்பும் வேலையைப் பார்த்து வருகிறது போலீஸ்.
நிலைமை கட்டுக்குள் இருக்கும் போதே நேற்றைக்கு போராட்டக்காரர்களில் தலைமை செயலகத்தில் சந்தித்தார் முதல்வர் பழனிசாமி. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீண்ட இந்த சந்திதிப்பில் மக்களின் எதிர்ப்பை மீறி எந்த திட்டமும் செயல்படுத்தப் படாது என முதல்வர் உறுதி அளித்ததாக போராட்டக் காரர்கள் தெரிவித்தனர். ஆனாலும், மத்திய அரசு இந்த திட்டத்தைக் கைவிடும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர். போராட்டத்திற்கு ஆதரவாய் வணிகர்களும் கடை அடைப்பில் எட்டுப்பட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர்களும் வேலை நிறுத்தத்தில் எட்டுப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஆதரவால் மாபெரும்போராட்டமாய் மாறி வருகிறது நெடுவாசல் போராட்டம்.

Central Government's project on Hydro carbon in Neuvasal in Pudukottai has triggered protest in the field. People across Tamil Nadu have showing their support to the protest especially the youngsters are travelling to Neduvasal to showcase their support for the protest. Chief Minister Palanisamy has called on the protesters on Wednesday and assured that the project wont be initiated. however the protest is still on waiting for the official announcement from Central Government.
No comments:
Post a Comment