Monday, 13 March 2017

'I Didn't Die' Says Revathi's Husband Suresh Menon

'I Didn't Die' Says Revathi's Husband Suresh Menon
'I Didn't Die' Says Revathi's Husband Suresh Menon
நான் சாகவில்லை! ரேவதியின் முன்னாள் கணவர் சுரேஷ்!
நடிகை ரேவதியின் முன்னாள் கணவரும்,‘புதிய முகம்’, ‘பாசமலர்கள்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் மேனன் இன்று இறந்துபோனதாக சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானது. இதனால் தமிழ்,,மலையாள திரையுலகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உண்மையில் இறந்து போனவர் மலையாளத்திரையுலகை சார்ந்த ‘புதிய முகம்’ என்ற மலையாளப்படத்தை இயக்கிய தீபன் என்பவர் ஆவார். படத்தின் தலைப்பால் ஏற்பட்ட இந்த குழப்பத்தால் சுரேஷ்மேனன் இறந்து போனதாக செய்திகள் வெளியாயின.
இதுகுறித்து சுரேஷ் மேனன் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருப்பதாவது.. ‘சில தொலைக்காட்சிகளில் நான் இறந்துபோனதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதை யாரும் நம்பவேண்டாம்’ எனற பதிவுடன் தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment