Be Proud being a Mother Says Famous Actress
Be Proud being a Mother Says Famous Actress
தாயாக இருப்பதில் பெருமை!
'வேலாயுதம்' படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், 'யாரடி நீ மோகினி' படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாகவும், 'அழகர் சாமியின் குதிரை' படத்தில் கதாநாயகியாகவும் நடித்தவர், சரண்யா மோகன். கேரளாவை சேர்ந்த இவர் திருமணம் செய்து கொண்டு கணவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.
குழந்தை பிறந்த பின், சரண்யா மோகன் குண்டாகி விட்டார். அவருடைய குண்டு உடம்பை குறிப்பிட்டு, இணையத்தளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள். இது பற்றி சரண்யா மோகன் கூறும் போது, "குழந்தை பெற்ற பின், பெண்கள் குண்டாவது சகஜம். என்னை கிண்டல் செய்வது பற்றி நான் கவலைப்படவில்லை. சினிமாவில் நடிப்பதை விட, எனக்கு குழந்தைதான் முக்கியம். ஒரு தாயாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்" என்று இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார், சரண்யா மோகன்.
No comments:
Post a Comment