Famous Director controversy tweet about Shruti Haasan
Famous Director controversy tweet about Shruti Haasan
ஷ்ருதிஹாசன்
விஷயத்தில் மாட்டிய இயக்குனர்!
தினந்தோறும்
ட்விட்டரின் மூலம் கோலிவுட்டில் நடக்கும்
பரப்பரப்புக்களை கோலிவுட்டை சார்ந்த பிரபலங்களே வெளியிட்டு
சக பிரபலங்களை கதிகலங்கச் செய்வார்கள். சில நாட்களுக்கு முன்னர்
சுசித்ரா வெளியிட்ட பதிவுகளால் கோலிவுட் கடும் அதிர்ச்சியை சந்தித்தது.
தற்போது
டைரக்டர் பிரபு சாலமனின் ஒரு
ட்விட்டால் கோலிவுட் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
அந்த ட்விட்டில் சொல்லியிருப்பதாவது.. நடிகைகளின் சம்பளம் ஒரு நாளுக்கு
85,000, அத்துடன் 2.50கோடி மற்றும் ஏசி.கேரவன் இதெல்லாம் கொடுத்தும்
ஒரு நாளைக்கு 5 மணி நேரம் தான்
நடிப்பாங்களாம் கோலிவுட்டின் லெஜென்ட்டோட மகள். என பதிவிடப்பட்டுள்ளது.
இந்தப்பதிவை
பார்த்த ட்விட்டர்வாசிகள் டைரக்டர் பிரபு சாலமன் குறிப்பிட்டிருப்பது
கமல்ஹாசனின் மகள் ஷ்ருதிஹாசன் தான்
என ட்விட் செய்து வருகிறார்கள்.
இந்த சர்ச்சை செய்தி பலவாறாக
பகிரப்பட்டு வருகிறது. அன்மையில் சங்கமித்ரா படத்திலிருந்து தயாரிப்பு தரப்பு ஷ்ருதிஹாசனை வெளியேற்றப்பட்டதாகவும்,
இல்லை நானாகத்தான் வெளியேறினேன் என ஷ்ருதிஹாசனின் அறிக்கையும்
இந்த ட்விட்டும் ஒருவிதத்தில் ரசிகர்களை யோசிக்க வைக்கத்தான் செய்கிறது.
உண்மையில்
டைரக்டர் பிரபு சாலமனுக்கு எந்த
ட்விட்டர் அக்கவுண்ட்டும் இல்லையாம். யாரோ சில விஷமிகள்
தங்களுடைய வழக்கமான வேலையை காட்டி வருகிறார்கள்
என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
இயக்குனர்
பிரபு சாலமன் தற்போது கும்கி2
படத்திற்கான லொக்கேஷனை தேடி தமிழக, கேரள
எல்லையில் உள்ள காடுகளில் சுற்றி
வருகிறார்.
No comments:
Post a Comment