Sunday, 9 July 2017

Reason behind Kanja Karuppu's eviction from Bigg Boss


Reason behind Kanja Karuppu's eviction from Bigg Boss
Reason behind Kanja Karuppu's eviction from Bigg Boss
After the twist and turns in Bigg Boss house Bharani, Oviya and Ganja Karuppu got the maximum votes for the elimination this week. The inmates had different reasons to take their names during the nomination process.

On Sunday, the host Kamalahasan announced that Ganja Karuppu has been eliminated from Bigg Boss Tamil. The actor apparently got lesser votes than Bharani. Oviya surprised everyone by getting more than a crore votes from the audience.


During his stay, Ganja Karuppu had been one of the lively faces in the house. His acts and one-liners impressed the viewers. On the flip side, his behaviour with some of the contestants like Bharani and Julie had not gone well with the audience.
கஞ்சா கருப்புவை வெளியேற்றியதின் உண்மைக்காரணம்
பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரணி, கஞ்சா கருப்பு மற்றும் ஓவியா ஆகியோர் இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றிருந்தனர். பரணி மற்றும் கஞ்சா கருப்பு இடையே நடந்த தொடர் வாக்கு வாதங்களும், பரணியை கஞ்சா கருப்பு அடிக்கப் பாய்ந்ததும் இருவரையும் எலிமினிஷனில் வைத்திருந்தது.

ஞாயிற்றுக் கிழமை அன்று நிகழ்ச்சியில் தோன்றிய உலக நாயகன் கமல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். எலிமினிஷனில் இருந்தவர்களை காப்பாற்ற நடந்த வாக்கெடுப்பில் ஒரு கோடியே முப்பது லட்சம் பேர் வாக்களித்திருந்தனர். அதில், மிகவும் குறைவான ஓட்டுகள் பெற்ற காரணத்தினாலேயே போட்டியை விட்டு கருப்பை வெளியேற்றுவதாக கூறினார் கமல். பதிவான வாக்குகளில் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகள் பெற்று ஆச்சரியப்படுத்தினார் ஓவியா.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது வெள்ளந்தி மனிதன் என்ற பெயரை எடுத்த கஞ்சா கருப்பு, பரணி மற்றும் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கோவக்காரராக ரசிகர்களுக்கு தெரிந்திருக்கிறார். இதனாலேயே, பிக் பாஸ் நிகச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். ஆனால், வைல்டு கார்டு சுற்று மூலம், மீண்டும் கஞ்சா கருப்பு இந்நிகழ்ச்சிக்கு வருவார் என்று கணேஷ், சக்தி உள்ளிட்டோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment